வெங்கட் பிரபுவுக்கு வந்த புதிய சோதனை?.. GOAT படத்தில் முடிவு எடுக்க முடியாமல் திணறினாரா?

சென்னை: நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. முக்கியமாக விமர்சன ரீதியாக பெருத்த அடி வாங்கியது. இந்தச் சூழலில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். பவதாரிணி உயிரிழந்ததால் படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்தார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

Here is the Full Details about GOAT Movie

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிக புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்‌ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.

நிறுத்தப்பட்ட ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்தது. பக்ரீத் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டு அசுரத்தனமாக உழைத்து வருவதாக கூறப்பட்டது. அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை இலங்கையில் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் இளையராஜாவின் மகளும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் GOAT படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தொடங்கிய ஷூட்டிங்: தற்போது தனது சகோதரியின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டிருக்கும் வெங்கட் பிரபு மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் விஜய்க்கு தங்கையாக எந்த ஹீரோயினை நடிக்க வைக்கலாம் என்று வெங்கட் பிரபு குழம்பி போயிருப்பதாக முதலில் கூறப்பட்டது. தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபிதாவை விஜய்க்கு தங்கையாக நடிக்க கமிட்டாக்கியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். GOAT படத்தில் நடித்து முடித்துவிட்டு ஒரே ஒரு படத்தில் நடிக்கும் அவர் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X