Pradeep Ranganathan - நடிகராக செம பிஸியாகிட்டார்போல..பிரதீப் ரங்கநாதன் அடுத்தது இவர் இயக்கத்தில் நடிக்கிறாரா?
சென்னை: Pradeep Ranganathan (பிரதீப் ரங்கநாதன்) விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதனுடன் அடுத்ததாக இணையவிருக்கும் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து படம் உருவானது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் டீசண்ட்டான வரவேற்பை கொடுத்தார்கள்.

லவ் டுடே: இதனையடுத்து சில வருடங்கள் அமைதியாக இருந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தை டெவலப் செய்து லவ் டுடே படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனே இதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சேஷனல் லவ் டுடே: லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை குறிப்பாக 2K கிட்ஸை வெகுவாக கவர்ந்துவிட்டதாலும், காதலர்களுக்குள் நடக்கும் ஊடலையும், கூடலையும் தற்காலத்திற்கேற்ப காட்சிப்படுத்தியிருந்ததாலும் மெகா ஹிட்டானது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படத்தை ரசித்தனர். மேலும் படம் திரையரங்குகளீல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு: இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த ரஜினி பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.
நடிகர்: லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்ஹ்டில் LIC (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற படத்தில் நடித்துவருகிறார். அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறிய பின் இப்படத்தை இயக்குவதால் இதன் கதை மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.
அடுத்த படம்: இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஓ மை கடவுளே என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தை இப்போது போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











