2023ல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்.. இத்தனை பேரா?.. இதோ முழு லிஸ்ட் உள்ளே
சென்னை: 2023 Celebrities Marriage (2023ல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்) 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. பலருக்கு மகிழ்ச்சியாகவும், பலருக்கு சோகமாகவும் சென்றிருக்கும் இந்த ஆண்டு. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த வருடத்தின் நிறைவு கொஞ்சம் அப்செட்தான். ஏனெனில் மிக்ஜாம் புயலால் அவர்கள் ரொம்பவே சோதனையை சந்தித்துக்கொண்டனர். இருந்தாலும் அடுத்து வரும் வருடம் நல்லபடியாக அமையட்டும். இந்த சூழலில் 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜெகத் தேசாய் - அமலா பால் திருமணம்: தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் மனஸ்தாபம் ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதனையடுத்து சிங்கிளாக இருந்த அவர், தனது நீண்ட வருட தோழரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது.

கவின் - மோனிகா: கோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகராக திகழ்பவர் கவின். சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த அவருக்கு டாடா படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்துவருகின்றன. அவர் நடித்திருக்கும் ஸ்டார் படத்தில் இடம்பெற்றிருக்கும் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற சிங்கிள்கூட இன்று வெளியானது. இவர் சில மாதங்களுக்கு முன்பு மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் லாஸ்லியாவை காதலித்து வந்தார் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்: இந்த வருடம் திருமணமான பிரபலங்களில் இவர்களது திருமணம்தான் பெரும் பேசு பொருள் ஆனது. நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் சில வருடங்களாகவே காதலித்துவந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் இந்தத் திருமணத்தை பார்த்த சிலர் கீர்த்தி பாண்டியனின் நிறத்தை வைத்து கேலி செய்தனர். அதற்கு அசோக் செல்வனோ அழகு நிறத்திலோ உடலிலோ இல்லை என்று சொல்லி கிண்டல் செய்தவர்களை வாயடைக்க வைத்தார்.

ரோஹித் - கார்த்திகா திருமணம்: கோலிவுட்டில் 80களில் ஃபேமஸ் நடிகையாக இருந்தவ ராதா. அவரது மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் சரியாக இல்லையென்பதால் பிஸ்னெஸ்ஸை கவனித்து வந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு ரோஹித் என்பவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் படு பிரமாண்டமாக நடந்தது. கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் அவரது திருமணத்தில் போடப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரது வாயையும் பிளக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம்: கோலிவுட்டில் இப்போதைக்கு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பரான இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்துவருகிறார். 46 வயதான இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்திருக்கிறார். துளிக்கூட இவர்களது காதல் பற்றி வெளியில் தெரியாமல் இருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு மைசூரில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

மேற்கூறியவர்களை தவிர்த்து பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை திருமணம் செய்துகொண்டார். அதேபோல் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. பாலிவுட்டை பொறுத்தவரை நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தன்னுடைய 60ஆவது வயதில் ரூபாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதேபோல் நடிகை பரினிதி சோப்ரா ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சத்தாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











