அடிதூள்...பீஸ்ட் மொத்த அப்டேட்டும் வந்தாச்சு...அடுத்து என்ன வரப்போகுது தெரியுமா?

சென்னை : பீஸ்ட் படம் பற்றிய தகவல்கள் தான் கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவையே அலற வைத்து வருகிறது. பீஸ்ட் ரிலீஸ் பற்றிய விபரங்களை அறிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடல் வெளியீட்டிற்கு பிறகு பீஸ்ட் டீமில் உள்ளவர்களை பின் தொடர்வோரின் எண்ணிக்கை சோஷியல் மீடியாவில் படுவேகமாக அதிகரித்து வருகிறது.

சென்சாரை அலற விட்ட ரசிகர்கள்

சென்சாரை அலற விட்ட ரசிகர்கள்

ஆரம்பத்தில் பீஸ்ட் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள், தற்போது ரிலீஸ் தேதி பற்றிய கேள்வியை தான் அதிகம் கேட்டு வருகின்றனர். பீஸ்ட் ரிலீஸ் பற்றி இதுவரை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் பல தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்சார் க்ளியரன்ஸ் கிடைக்க தாமதமானதால் தான் பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதமாகி வருவதாக கூறப்பட்டது. சென்சார் க்ளியரன்ஸ் அறிவிப்பு நேற்று வந்து விடும் என சொல்லப்பட்டதால், சென்சார் இணையதளத்தை விஜய் ரசிகர்கள் அதிகம் தேடியதால் அந்த இணையதளம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

பீஸ்ட் செம அப்டேட்

பீஸ்ட் செம அப்டேட்

இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளதாம். பீஸ்ட் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடம் 38 விநாடிகள். இந்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பீஸ்ட் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

ரிலீஸ் தேதியும் வந்தாச்சா

ரிலீஸ் தேதியும் வந்தாச்சா

ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் படம் ரிலீசாவது 99.9 சதவீதம் உறுதியாகி விட்டதாம். பீஸ்ட் வெளிநாட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான தொகைக்கு வியாபாரம் ஆகி உள்ளதாம். ரஜினி அல்லாத ஒருவரின் படம் வெளிநாட்டில் இவ்வளவு அதிகமான தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாம்.

டிரெண்டிங்கில் அதகளப்படும் பீஸ்ட்

டிரெண்டிங்கில் அதகளப்படும் பீஸ்ட்

ஆக்ஷன் த்ரில்லர் படமான பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீஸ் என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்ட தகவல் வெளியானதுமே ட்விட்டரில் #BeastFromAril13th என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் கருணாமூர்த்தி அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளாராம். விஜய்யின் திரையுலக பயணத்திலேயே இந்த படம் தான் அதிக தொகைக்கு வெளிநாட்டு உரிமம் வியாபாரம் ஆன படமாம்.

Recommended Video

'மாதம் 400 ரூபாய் சம்பளம் வாங்கிய நேரம் Vijay பிறந்தான்'-SA Chandrasekhar | Part 3 | Filmibeat Tamil
அடுத்து என்னப்பா வர போகுது

அடுத்து என்னப்பா வர போகுது

பீஸ்ட் ரிலீஸ் பற்றிய மொத்த அப்டேட்டும் கசிந்து விட்டதால் விரைவில் மோஷன் போஸ்டருடன் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவிக்க உள்ளதாம். அதைத் தொடர்ந்து டீசர், டிரைலர் ஆகியனவும் வெளியிடப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X