Jailer - ரஜினி முதல் தமன்னாவரை.. ஜெயிலர் படக்குழுவின் சம்பளம் விவரம்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தில் நடித்திருப்பவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர். இவர்கள் தவிர விநாயகன், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் பத்தாம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகவிருக்கிறது.

Here is the Information about Jailer Movie Cast and Crew Salary details

என்ன கதை: காவல் துறை அதிகாரியான தனது மகனை ஒரு கும்பலிடமிருந்து மீட்பதுதான் படத்தின் ஒன்லைன் என கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ரிட்டையர்டு ஜெயிலராக நடித்திருக்கிறார். படத்தின் ஒன்லைன் ஆக்‌ஷன் மோடில் இருந்தாலும் நெல்சன் திலீப்குமார் தனது ஸ்டைலில் டார்க் காமெடி கலந்து படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது.

ட்ரெய்லர்: அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது படத்தின் ட்ரெய்லர். ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே வி ஆர் ஃப்ரம் சிபிஐ என பேச அதற்கு சுனிலோ டொனேஷன் எதுவும் வேண்டுமா என பேசி சிரிக்க வைக்கிறார். மேலும் ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்துமே அட்டகாசமாக இருக்கின்றன. இருப்பினும் ட்ரெய்லரில் பீஸ்ட் வாடை கொஞ்சம் அடிப்பதாக ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

சம்பள விவரம்: அதேசமயம் படத்தின் ட்ரெய்லருக்கு பெரும்பாலும் பாஸிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்நிலைபடத்தில் நடித்தவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் 90லிருந்து 100 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால்தான் அவருக்கு இந்த சம்பளம் என கூறப்படுகிறது.

Here is the Information about Jailer Movie Cast and Crew Salary details

மற்றவர்களின் சம்பள விவரம்: அதேபோல் மோகன் லால் எட்டு கோடி ரூபாய் சம்பளமும் , ஜாக்கி ஷெராஃப் நான்கு கோடி ரூபாயும், சிவராஜ்குமார் 4 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது. பான் இந்தியா ஸ்டார்கள் களமிறங்கியிருந்தாலும் படத்தின் மெயின் வில்லன் மலையாள நடிகர் விநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர தமன்னா 3 கோடி ரூபாயும், ரம்யா கிருஷ்ணன் 80 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெற்றிருக்கிறார்களாம்.

என்ன ரோல்: ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவரும் அறிந்தது. அதேசமயம் மோகன் லாலுக்கு படத்தில் 15 நிமிடங்களுக்கும் குறைவான காட்சிகளே இருக்கின்றன என்றும் தமன்னா தெலுங்கு நடிகையாக படத்தில் தோன்றுவார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பீஸ்ட் படத்தின் தோல்வி காரணமாக இந்தப் படம் நெல்சன் திலீப்குமாருக்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்பட்டது. நேற்று ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இதன் முலம் நெல்சன் கம்பேக் கொடுத்துவிட்டுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X