Jigarthanda Double X Box Office - பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்..
சென்னை: Jigarthanda Double X Collection (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல்) கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் 5ஆவது வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் கார்த்திக் சுப்புராஜ் முதன்மையானவர். அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசத்தோடு வெளியாவதால் அவரது படங்கள் என்றால் தரமாக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு அவரது இரண்டாவது படமான ஜிகர்தண்டாவிலிருந்தே தோன்றிவிட்டது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: ஜிகர்தண்டா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜின் புகழும், கிராஃபும் உச்சம் சென்றது. தொடர்ந்து மெர்குரி, பேட்ட படங்களை இயக்கிய அவர் தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
செம ரெஸ்பான்ஸ்: படமானது தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்தத் தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் ஜப்பான் படத்துக்கு அடுத்ததாக இந்தப் படத்துக்குத்தான் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் கார்த்திக் சுப்புராஜ் படத்தை அட்டகாசமாக கொடுத்திருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ரஜினி வாழ்த்து: படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது வாழ்த்து செய்தியில், ஜிகர்தண்டா 2 படம் ஒரு குறிஞ்சி மலர் என குறிப்பிட்டு படத்தை வெகுவாக பாராட்டி கார்த்திக் சுப்புராஜை நினைத்து தான் பெருமைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறது.
வசூல் நிலவரம்: இப்படி ஒருபக்கம் படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் ரெஸ்பான்ஸ் கிடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ஜப்பான் மீதிருந்த எதிர்பார்ப்பால் முதல் நாளில் மட்டும்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வசூலில் டல்லடித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கெத்து காட்டி வருகிறது.
அதன்படி முதல் நாளில் 2.5 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 4.86 கோடி ரூபாய், மூன்றாவது நாளில் 7.2 கோடி ரூபாய், நான்காவது நாளில் 4 கோடி ரூபாய் என மொத்தம் 19 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று ஜிகர்தண்டா 2 திரைப்படம் 2லிருந்து 3 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் இதுவரை மொத்தம் 21லிருந்து 22 கோடி ரூபாய்வரை தமிழ்நாட்டில் வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications