Dhuruva Natchathiram - சோதனை மேல் சோதனை.. துருவ நட்சத்திரம் படத்தில் நடிகைக்கு வந்த சிக்கல்?
சென்னை: Dhuruva Natchathiram (துருவ நட்சத்திரம்) பல வருடங்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ். இவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக கௌதம் மேனன்: இவர் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கௌதம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் ருத்ரதாண்டவம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துவருகிறார் கௌதம் மேனன்.
சிம்புவுடனும், விஜய்யுடனும்: அதனையடுத்து கௌதம் மேனன் நடிப்பதற்கு பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. அதன்படி சிம்பு நடித்த பத்து தல படத்தில் நடித்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். அதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. பத்து தல, லியோ படங்களைத் தவிர்த்து தங்கர் பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன படத்திலும் நடித்திருக்கிறார்.
துருவ நட்சத்திரம்: இதற்கிடையே கோலிவுட்டின் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் கௌதம் மேனன். இதில் விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பு: பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாலும் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை எகிற வைத்தது. மேலும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்ததற்கு கௌதம் மேனனுக்கு உள்ள கடன் பிரச்னைதான் காரணம் என கூறப்பட்டது.
சூடுபிடித்த துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவதற்கான சாதக சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிவருகின்றன. சமீபத்தில்கூட படத்திலிருந்து சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. படம் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கை படக்குழுவிடமும், ரசிகர்களிடமும் எழுந்திருக்கிறது.
காட்சிகள் நீக்கம்: இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி காலங்கடந்து படம் ரிலீஸ் ஆவதால் கௌதம் மேனன் சில மாற்றங்களை படத்தில் செய்திருக்கிறாராம். அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











