Simbu Marriage - சிம்புவுக்கு திருமணமா?.. பொண்ணு யார் தெரியுமா?.. கோலிவுட்டில் பரபரக்கும் புதிய தகவல்

சென்னை: Simbu (சிம்பு) நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சிம்பு திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் தடுமாறுவாரோ என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர்.

Here is the Latest Information About Simbu Marriage

நூறு கோடி ரூபாய் க்ளப்: இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அரசியல் களத்தையும், டைம் லூப் கான்செப்ட்டையும் மையமாக வைத்து படம் உருவாகியிருந்தது. சிம்புவின் எனர்ஜியான நடிப்பு, வெங்கட் பிரபு அசாத்தியமான திரைக்கதை ஆகியவை இணைந்து படத்தை மெகா ஹிட்டாக்கின. மேலும் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்து அசத்தியது.

வெந்து தணிந்தது காடு: இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பை பார்த்த பலரும் சிறந்த நடிகர் என்பதை சிம்பு உணர்த்திவிட்டார் என புகழ்ந்தனர். தொடர்ந்து நடித்த பத்து தல படம் சறுக்கியது. கன்னட படமான மஃப்டி படத்தின் ரீமேக்காக அது அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக இரண்டு ஹிட் கொடுத்த எஸ்டிஆர் மூன்றாவது படத்தில் சறுக்கியது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்.

கமல் தயாரிப்பில்: தற்போது தனது 48ஆவது படத்தில் நடிக்க கமல் ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகியிருக்கிறார். படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். பத்து தல படத்தில் ஏற்பட்ட சறுக்கலை இந்தப் படத்தின் மூலம் சரி பண்ணிவிடலாம் என்ற முனைப்பில் சிம்பு பணியாற்றவிருக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை கற்றுவருவதாக கூறப்படுகிறது.

எப்போது திருமணம்: இதற்கிடையே சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அவரிடம் நீண்ட வருடங்களாக திருமணம் பற்றி யார் கேட்டாலும் சரியான பதிலை சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் 40 வயதாகும் சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்றும் சினிமா ஃபைனான்ஸியர் ஒருவரின்மகளைத்தான் அவர் திருமணம் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. சிம்பு இதற்கு முன்னதாக இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X