Rajini 171 - என்னது ரஜினி 171ல் 15 ஹீரோக்களா?.. லோகேஷ் என்ன செய்ய காத்திருக்கிறாரோ.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: Rajini 171 (ரஜினி 171) ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் 15 ஹீரோக்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜின் க்ராஃபை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனால் அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் நடிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.

Here is the Latest Informationa About Rajini 171 Movie

லியோவை முடித்த லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் தமிழ்நாடு, திருப்பதி என பல்வேறு இடங்களில் நடந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் ஷூட்டிங் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் விரைவில் டப்பிங் கொடுக்கவிருக்கிறார்.

லோகேஷின் அடுத்தக்கட்ட ப்ளான்: லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2வை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே ரஜினியை வைத்து அவர் இயக்குவார் என தகவல்கள் பரவின. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதுகுறித்து எதுவும் வராமல் இருந்தாலும் கிட்டத்தட்ட ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணைவது உறுதியாகிவிட்டது. லியோவில் நடித்த மிஷ்கின்கூட அதை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தியாவின் பிரமாண்ட படமாக அது அமையும் என்ற கருத்தும் நிலவுகிறது.

உறுதிப்படுத்திய லோகேஷ்: மேலும் லோகேஷ் கனகராஜும் ரஜினியுடன் இணையும் படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடும் என தெரிவித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கிடையே ரஜினி படத்திற்கான ஆர்மபக்கட்ட பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Here is the Latest Informationa About Rajini 171 Movie

15 ஹீரோக்கள்: இந்நிலையில் தலைவர் 171 பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் வந்த பிறகு தமிழில் மல்டி ஸ்டாரர் படம் வருவது அதிகரித்துள்ளது. விக்ரமில் சூர்யா, லியோவில் பலர் என அதை சாத்தியமாக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்துடன் இணையும் படத்தில் 15 ஹீரோக்களை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

ஆனால் ரஜினிகாந்த் மல்டி ஸ்டாரர் படங்களில் பெரும்பாலும் நடித்ததில்லை. எனவே இது நடப்பதற்கான சாத்தியம் குறைவே என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி ஒருவேளை 15 ஹீரோக்கள் நடித்தால் அதற்கான ஸ்பேஸை லோகேஷ் கனகராஜ் கதையில் எப்படி வைப்பார். இதெல்லாம் தேவையில்லாத வேலை ரஜினியை வைத்து மட்டும் மாஸ் செய்தால் போதும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X