Vidaamuyarchi - அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. விடாமுயற்சி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் உள்ளே

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படம் குறித்த புதிய தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

Here is the Latest Update Of Ajiths Vidaamuyarchi

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாகிவருகின்றனர். இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ ரசிகர்கள் அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்றிவருகிறார்.

விடாமுயற்சி ஷூட்டிங்: தனது முதற்கட்ட உலக சுற்றுப்பயணத்தை நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் மேற்கொண்டார். எனவே அதனை முடித்த கையோடு விடாமுயற்சி ஷூட்டிங் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போயிருப்பதகா கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனியும் திரைக்கதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது

வெளிநாட்டு டூர்: அமலாக்கத்துறை பிரச்னை எல்லாம் முடிந்துவிட்டதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என நம்பப்பட்டது. ஆனால் அஜித்தோ திடீரென சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தார். மறுபக்கம் மகிழ் திருமேனி லொக்கேஷன் பார்க்க சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதனால் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கூறினார்கள்.

Here is the Latest Update Of Ajiths Vidaamuyarchi

சென்னை திரும்பிய அஜித்: நிலைமை இப்படி இருக்கு வெளிநாட்டு டூரை முடித்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார் அஜித்குமார். இதனால் படத்தின் ஷூட்டிங் நிச்சயம் தொடங்கிவிடும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால் அவர்களின் ஆர்வத்தை ஆஃப் செய்யும் விதமாக அஜித்குமார் மீண்டும் வெளிநாடு சென்று பைக்கில் ஏறிவிட்டார். அது தொடர்பான புகைப்படத்தை ஷாலினி பகிர்ந்திருந்தார்.

பத்து நாட்கள்தான்: அதனை பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ மீண்டும் பைக் டூரா அப்போ விடாமுயற்சி நிலைமை என்ற கேள்வியை சோகத்துடன் எழுப்பிவந்தனர். இந்நிலையில் அஜித்தின் தற்போதைய டூர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்த டூரை அவர் பத்து நாட்கள் மட்டும்தான் ப்ளான் செய்திருக்கிறாராம். அதனை முடித்துவிட்டு சென்னை திரும்பும் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறாராம். மேலும் மகிழ் திருமேனியிடம் மற்ற வேலைகளை விரைந்து முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X