twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல் அடித்ததா.. கோட்டை விட்டதா.. தமிழ் சினிமாவில் 2019ல் வெளியான ஸ்போர்ட்ஸ் படங்கள் ஓர் பார்வை!

    |

    Recommended Video

    Bigil 50th day celebration | ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

    சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு ஜானர் படங்கள் டிரெண்டாகிறது என்றால் கூடவே அதே ஜானரில் பல படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்.

    இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அந்த குதிரையின் பின்னாடியே ஓடுவது தொடர்ந்து வழக்கமாகி வருகிறது.

    பேய் படங்கள், காமெடி படங்கள், மசாலா படங்கள் வரிசையில், இந்த ஆண்டு ஸ்போர்ட்ஸ் படங்களும் இணைந்துள்ளது.

    லோ பட்ஜெட் முதல் ஹை பட்ஜெட் வரையிலான ஸ்போர்ட்ஸ் படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன.

    2019ம் ஆண்டு வெளியான ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு இருக்கிறதா என்பதை இந்த தொகுப்பில் காண்போம்..

    அந்த ஹீரோ டைரக்டராகும்போது அதுல நடிக்கணும்... கல்யாணிக்கு இப்படியொரு ஆசை !அந்த ஹீரோ டைரக்டராகும்போது அதுல நடிக்கணும்... கல்யாணிக்கு இப்படியொரு ஆசை !

    பாலிவுட் இன்ஸ்பிரேஷன்

    பாலிவுட் இன்ஸ்பிரேஷன்

    பாலிவுட்டில் வெளியான எம்.எஸ். தோனியின் பயோபிக் மற்றும் தங்கல் படங்கள் உருவாக்கிய தாக்கம், இந்தியளவில் பல ஸ்போர்ட்ஸ் படங்கள் உருவாக காரணமாக அமைந்தது. பாலிவுட்டிலேயே இன்னும் ரிலீசுக்காக எத்தனையோ ஸ்போர்ட்ஸ் படங்கள் வெயிட்டிங்கில் காத்துக்கிடக்கிறது வேற விஷயம். சரி தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான ஸ்போர்ட்ஸ் படங்கள் குறித்து பார்ப்போம்.

    நட்பே துணை

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து பல ஸ்போர்ட்ஸ் தமிழ் படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியான நட்பே துணை படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் படமாக வெளியானது. மீசையை முறுக்கு படம் அளவுக்கு இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

    வெண்ணிலா கபடி குழு 2

    வெண்ணிலா கபடி குழு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டு விக்ராந்த் நடிப்பில் அதன் இரண்டாம் பாகமான வெண்ணிலா கபடி குழு 2 படம் வெளியானது. கபடி போட்டியை மையமாக வைத்து வெளியான இந்த படமும் விளையாட்டு ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

    கென்னடி கிளப்

    வெண்ணிலா கபடி குழு படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சுசீந்திரன், இந்த ஆண்டு பெண்கள் கபடியை கையில் எடுத்துக் கொண்டு கென்னடி கிளப் படத்தை இயக்கினார். பாரதிராஜா, சசிகுமார் என பிரபலங்களை படத்தில் வைத்திருந்தாலும், கென்னடி கிளப் படமும் பெயருக்காக வெளியான விளையாட்டு படமாகவே வந்து சென்றது.

    பிகில்

    தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஸ்போர்ட்ஸ் படமாக பிகில் வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. பெண்கள் கால்பந்து அணியின் கோச்சாக இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்திலும் விளையாட்டு கொஞ்சமாகவும், கமர்ஷியல் அதிகமாகவும் இருந்ததால், பாக்ஸ் ஆஃபிஸில் வசூலில் கல்லாக் கட்டினாலும், ஸ்போர்ட்ஸ் ரசிகர்களை ஓரளவுக்கே பிகில் திருப்தியடைய செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

    ஜடா

    பிகில் படத்தில் நடித்த கதிர், யோகி பாபு நடிப்பில் இந்த மாதம் வெளியான ஜடா படமாவது ஸ்போர்ட்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று பார்த்தால், ஸ்போர்ட்ஸ் படத்தில் ஹாரரை கலந்து வைத்து விளையாட்டு பிரியர்களை ஏமாற்றிவிட்டார் படத்தின் இயக்குநர்.

    சாம்பியன்

    கென்னடி கிளப் படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இன்னொரு விளையாட்டு படமான சாம்பியன் படத்தையும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். விஷ்வா, மிருனாளினி உள்ளிட்டோர் நடிப்பில் மற்றொரு கால்பந்தாட்ட படமாக வெளியான சாம்பியன் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், கென்னடி கிளப் படத்திற்கு எவ்வளவோ பரவாயில்லை என்ற பாஸ் மார்க்கை வாங்கியுள்ளது. தமிழில் எப்பத்தான் கமர்ஷியல் கலக்காமல் ப்யூர் ஸ்போர்ட்ஸ் சினிமா வெளியாகும் என்பது பில்லியன் டாலர் கேள்வி தான்.

    English summary
    After Bollywood, Tamil cinema also toss the coin to sports cinema in this year 2019. Seven more movies comes in the journer with also a commercial elements.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X