twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2022ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கிய படங்கள்... லிஸ்ட்ல இந்தப் படம் தான் டாப்!

    |

    சென்னை: கொரோனா ஊரங்கிற்கு பின்னர் 2022ம் ஆண்டு சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின.
    திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியான பட்ங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் தோல்வியைத் தழுவின. 2022ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கிய படங்களை தற்போது பார்க்கலாம்.

    2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிகமாக தேடப்பட்ட பாடல்.. முதல் 10 இடத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி! 2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிகமாக தேடப்பட்ட பாடல்.. முதல் 10 இடத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி!

    ஜனவரியில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்

    ஜனவரியில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்

    2022ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு எதிர்பார்க்காத பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் அமைந்தாலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. ஜனவரியில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிப்பில் வெளியான 'என்ன சொல்ல போகிறாய்' நெகட்டிவான விமர்சனங்களால் மொக்கை வாங்கியது. முன்னதாக இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டில் அஸ்வின் வாய்விட்டு மாட்டிக் கொண்டதும் இந்தத் தோல்விக்கு காரணமாகிப் போனது. அதேபோல், சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப்படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கியது.

    பிப்ரவரி மாதம் ரிலீஸ்'

    பிப்ரவரி மாதம் ரிலீஸ்'

    பிப்ரவரியில் விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் திரைப்ப்டம் வெளியானது. விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், விமர்சன ரீதியாகவும் வசூலிலும் மரண அடி வாங்கியது. அதேபோல் விஷ்ணு விஷாலின் 'எப்ஃஐஆர்' திரைப்படமும் தோல்வியைத் தழுவியது.

    மார்ச் மாதம் வெளியான தோல்விப் படங்கள்

    மார்ச் மாதம் வெளியான தோல்விப் படங்கள்

    மார்ச் மாதம் சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்பட்ம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் படமான இது, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதேபோல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான தனுஷின் 'மாறன்' திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஏப்ரலில் ரிலீஸில் ஏமாற்றிய படங்கள்

    ஏப்ரலில் ரிலீஸில் ஏமாற்றிய படங்கள்

    ஏப்ரல் மாதம் சிவாவின் இடியட், வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை, ஜிவி பிரகாஷின் செல்ஃபி ஆகிய படங்கள் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், இந்தப் படங்களும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தன.

    மே, ஜூன் ரிசல்ட்

    மே, ஜூன் ரிசல்ட்

    மே மாதம் ரிலீஸான கூகுள் குட்டப்பா, சிபி சத்யராஜ் நடித்த ரங்கா ஆகிய பட்ங்கள் மோசமான தோல்வியை தழுவின. அதேபோல், ஜூன் மாதம் நயன்தாரா நடிப்பில் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான ஓ2, சிபி சத்யராஜ் நடிப்பில் மாயோன் படங்களும் மோசமான தோல்வியைத் தழுவின.

    ஜூலை, ஆகஸ்ட் ரிலீஸ்

    ஜூலை, ஆகஸ்ட் ரிலீஸ்

    ஜூலையில் சிம்பு, ஹன்சிகா, மஹத் நடிப்பில் மஹா திரைப்படம் வெளியானது. ரொம்பவே தாமதமாக ரிலீஸான இந்தப் படம் சுத்தமாக ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. அதேபோல் அண்ணாச்சி ஹீரோவாக அறிமுகமான 'தி லிஜெண்ட்' திரைப்படத்துக்கும் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சந்தானம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குலுகுலு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கியது. முக்கியமாக ஜிவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதல் பாகம் அளவிற்கு இல்லையென்பதால், இந்தப் படமும் தோல்வியைத் தழுவியது. மேலும், ஆகஸ்ட் இறுதியில் வெளியான விக்ரமின் 'கோப்ரா' முதல் நாளில் நல்ல ஓப்பனிங் இருந்தும், நெகட்டிவான விமர்சனங்களால் மரண அடி வாங்கியது. இண்டப் படத்திற்கு கொடுக்கப்பட்ட பில்டப்பில் பாதி கூட இல்லையென நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருந்தார்.

    செப்டம்பர் - அக்டோபர் ரிலீஸ்

    செப்டம்பர் - அக்டோபர் ரிலீஸ்

    ஆர்யா - சக்தி செளந்தர்ராஜன் கூட்டணியில் 'டெடி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதால், 'கேப்டன்' படத்துக்கும் அதிகம் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், செப்டம்பர் 8ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு படுதோல்வியடைந்தது. செப்டம்பர் மாதம் வெளியான அருண் விஜய்யி சினம் திரப்படமும் எதிர்பார்ப்பை ஏமாற்றி படுதோல்வியடைந்தது. அதேபோல், தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியான நானே வருவேன் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அக்டோபரில் தீபாவளியை முன்னிட்டு வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. டாக்டர், டான் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் மிக மோசமான தோல்வியைக் கொடுத்தது.

    நவம்பர் - டிசம்பர் ரிசல்ட்

    நவம்பர் - டிசம்பர் ரிசல்ட்

    நவம்பர் முதல் வாரத்தில் வெளியான சுந்தர் சியின் காஃபி வித் காதல், சசிகுமாரின் நான் மிருகமாய் மாற, சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம், அதர்வா, ராஜ்கிரன் இணைந்து நடித்த பட்டத்து அரசன் ஆகிய படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்தன. அதேபோல், டிசம்பரில் ரிலீஸான விஜய் சேதுபதியின் டிஎஸ்பி திரைப்படம் மிகப் பெரிய மரண அடி வாங்கியது.

    English summary
    In 2022, more than 100 Tamil movies were released in theatres and OTT. Among these, Veerame Vaagai Soodum, Etharkum Thunindhavan, Maaran, Google Kuttappa, Maha, The Legend, Gulu Gulu, Jiivi 2, Cobra, Sinam, Nane Varuvean, Prince, Koffee With Kaadhal, Agent Kannayiram, DSP were the most anticipated films. However, these films were huge flops.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X