கும்முற டப்புற முதல் வெறித்தனம் வரை.. 2019ல் உங்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 10 பாடல்கள் இதோ!

கும்முற டப்புற முதல் வெறித்தனம் வரை.. 2019ல் உங்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 10 பாடல்கள் இதோ!

சென்னை: கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடல் இந்த ஆண்டும் பல ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்து யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த ஆண்டும் அதே போல பல புதிய பாடல்கள் பொங்கல் முதல் தீபாவளி வரை வெளியாகி குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம் போட வைத்து வருகிறது.

2020ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், 2019ம் ஆண்டில் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த பாடல்களில் டாப் 10 இடத்தை எந்த எந்த பாடல்கள் பிடித்திருக்கின்றன என்பதை இங்கே காண்போம்..

10.வந்தா ராஜாவாதான் வருவேன் – ரெட் கார்டு

செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் என அடம்பிடித்த வந்த சிம்புவுக்கு அந்த படம் சரியாக அமையவில்லை. சிம்புவுக்கு தமிழ் சினிமாவில் ரெட் கார்டு வழங்கப்படும் என்ற பேச்சுக்கள் அடிபட்டிருந்த நிலையில், எனக்கா ரெட் கார்டு என்ற பாடல் வெளியாகி, சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

9.காஞ்சனா 3 – வா நண்பனுக்கு கோயில கட்டு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து இந்த ஆண்டு வெளியான காஞ்சனா 3 படம் முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு ஓடவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை அள்ளியது. அந்த படத்தில் இடம்பெற்ற வா நண்பனுக்கு கோயில கட்டு பாடல் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்தது.

8.காப்பான் – சிறுக்கி

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காப்பான் படத்தில் இடம்பெற்ற சிறுக்கி பாடல், கிராமத்து வரிகள் மற்றும் மத ஒற்றுமையை மேம்படுத்தும் வரிகளுடன் இடம் பெற்றிருந்தாலும், அவிச்ச முட்டை ஆம்லேட் ஆக மாறாது என்ற தத்துவ வரிகளுக்காகவே பலராலும் ரசிக்கப்பட்டது.

7.நட்பே துணை – ஆத்தாடி என்ன உடம்பு

ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நட்பே துணை படத்தில் இடம்பெற்ற ஆத்தாடி என்ன உடம்பு பாடல் அனைத்து திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் என பலவற்றிலும் இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்து வருகிறது.

6.சார்லி சாப்ளின் 2 – சின்ன மச்சான்

பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடல் இந்த ஆண்டு ஒலிக்காதே வீடுகளே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபுதேவாவின் நடன அசைவுகள் மற்றும் நிக்கி கல்ராணியின் கவர்ச்சியான ஆட்டம் செந்தில், ராஜலக்‌ஷ்மியின் குரல் என சின்ன மச்சான் பாடல் மாஸ் காட்டியது.

5.நம்ம வீட்டு பிள்ளை – காந்தக் கண்ணழகி

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு நல்ல வசூலை வாரி வழங்கியது. இமான் இசையில், அனிருத்தின் குரலில் இடம் பெற்ற காந்தக் கண்ணழகி பாடலில் வரும் கும்முற டப்புற கும்முற டப்புற பாடல் வரிகளுக்கு பல குழந்தைகள் அதே போல ஆடி வருகின்றனர். டிக் டாக் வீடியோக்களுக்கும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது.

4.கோமாளி – பைசா நோட்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பைசா நோட்ட தேடி பார்த்தேன் பாடலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சாமி சிலை போல காஜல் அகர்வால் இருக்கும் காட்சிகளுக்கு தணிக்கையில் சின்ன சின்ன கரெக்‌ஷன் செய்யப்பட்டாலும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் பைசா நோட் பாடல் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

3.விஸ்வாசம் – அடிச்சுத்தூக்கு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சுத் தூக்கு பாடல், பல ரெக்கார்டுகளை பாடல் வரிகளை போலவே அடிச்சுத் தூக்கியது. வேட்டி வேட்டி வேட்டிக் கட்டுப் பாடல் தமிழர்களின் அடையாள பாடலாக இந்த ஆண்டு மாறியுள்ளது.

2. பேட்ட – மரண மாஸ்

அனிருத் இசையில் சூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு பாடல் அமையும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். கபாலி, காலா படங்களில் மிஸ்ஸான எஸ்.பி.யின் குரலில் மீண்டும் சூப்பர் ஸ்டார் மரண மாஸ் காட்டிய பாடல், நிச்சயம் சூப்பர் ஹிட் பாடல்தான். அடுத்த ஆண்டு தர்பார் படத்தில் வெளியாகவுள்ள சும்மா கிழி பாடல் இப்பவே சும்மா கிழித்து வருகிறது.

1.பிகில் – வெறித்தனம்

மெலோடியாக இருந்தாலும், குத்தாட்ட பாடல் ஆனாலும் சரி ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்பதை போல இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பிகில் படத்தில் போட்ட நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம் பாடலில் நடிகர் விஜய் போட்ட டான்ஸ் போல இளைஞர்கள் பலரை இந்த வெறித்தனம் பாடல் ஆட வைத்து வருகிறது. பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான பிகிலு பிகிலு பிகிலுமா பாடலும் இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X