twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப் 10: 2019ல் மனதை மயக்கிய ரம்மியமான மெலோடி பாடல்கள் லிஸ்ட் இதோ!

    |

    சென்னை: என்னதான் ஃபாஸ்ட் பீட் பாடல்கள் டாப் ரேட்டிங்கை பெற்றாலும், அது கொஞ்ச காலத்தில் ஃபேட் ஆகிவிடும். ஆனால், மீண்டும் மீண்டும் காதலுடன் கேட்கத் தூண்டுவது மனதை மயக்கும் மெலோடி பாடல்கள் தான்.

    அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை எண்ணற்ற மெலோடி பாடல்கள் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளன.

    பாடல்களே வேண்டாம் என படம் எடுக்கும் சூழல் உருவாகி இருக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு படத்திற்கு ஒரு மெலோடி பாடல் இடம்பெறுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

    அந்த வகையில் 2019ம் ஆண்டு அதிர்ஷ்டம் செய்த ஆண்டு என்றே சொல்லலாம், பாடல் இடம்பெற்ற திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும், அந்த பாடலின் தனித்துவத்திற்காக மீண்டும் மீண்டும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டில் டாப் 10 இடங்களில் எந்த எந்த மெலோடி பாடல்கள் இடம் பிடித்துள்ளது என்பதை இங்கே காண்போம்.

    தமிழ் சினிமாவின் புது வில்லன்... ஹிந்தி நடிகரின் மருமகன்!தமிழ் சினிமாவின் புது வில்லன்... ஹிந்தி நடிகரின் மருமகன்!

    10. நேர்கொண்ட பார்வை – அகலாதே

    எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அகலாதே பாடல் லிரிக் வீடியோ 10 மில்லியன் பார்வைகளையும், வீடியோ பாடல் 7 மில்லியன் பார்வைகளையும் பெற்று ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. இந்த பாடலை பா. விஜய் எழுதியுள்ளார். பிரித்வி மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடியுள்ளனர்.

    9. மான்ஸ்டர் – அந்தி மாலை நேரம்

    ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் இந்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்வித்தது. பிரியா பவானி சங்கரை பெண் பார்க்கும் பாடலாக சித் ஸ்ரீராம் குரலில் அமைந்த அந்தி மாலை நேரம் பாடலை யூடியூபில் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

    8. தடம் – இணையே என் உயிர் துணையே

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் டபுள் ரோலில் நடித்து சூப்பர் ஹிட்டான தடம் படத்தில் இடம்பெற்ற இந்த இணையே என் உயிர் துணையே ரொமான்டிக் பாடல் பல காதலர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. அருண்ராஜ் இசையில், மதன் கார்க்கி வரிகளில் உருவான இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் பத்மலதா இணைந்து பாடியுள்ளனர்.

    7. கடாரம் கொண்டான் – தாரமே தாரமே

    ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சியான் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி ஹாசன் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்தில் இடம்பெற்ற தாரமே தாரமே பாடல் இந்த ஆண்டில் மெலோடி பிரியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. ஜிப்ரான் இசையில் விவேகா வரிகளில் உருவான இந்த பாடலையும் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த ஆண்டு சித் ஸ்ரீராம் டாப் 10 பாடல்கள் என்றே மெலோடி பாடல்களை சொல்லலாம். அத்தனை பாடல்களை கொடுத்துள்ளார்.

    6. எனை நோக்கிப் பாயும் தோட்டா – மறுவார்த்தை பேசாதே

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படம் வெளியாகியிருந்தால் இந்த பட்டியலில் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பேசாதே பாடல் தான் முதலிடம் பிடித்திருக்கும். இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களின் மனங்களை கொள்ளைக் கொண்டுள்ள இந்த பாடல் இந்த ஆண்டின் டாப் 10 சிறந்த பாடல்கள் பட்டியலில் ஒருவழியாக இடம்பிடித்துள்ளது. தர்புகா சிவா இசையில் சித் ஸ்ரீராம் மாயக் குரலில் தாமரையின் வரிகளில் உருவான இந்த பாடலை மீண்டும் ஒருமுறை மறுவார்த்தை பேசாமல் கண்டு களியுங்கள்.

    5. பேட்ட – இளமை திரும்புதே

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியான பேட்ட படத்தில் இடம்பெற்ற இளமை திரும்புதே பாடல் இந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் டாப் 5 ஸ்பாட்டை பிடித்துள்ளது. அனிருத் இசையில் தனுஷ் வரிகளில் ரஜினி - சிம்ரன் ரொமான்ஸில் உருவான இந்த பாடல் சூப்பர்ஸ்டாரின் ஆல் டைம் ஃபேவரைட் லிஸ்டில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

    4. என்.ஜி.கே – அன்பே பேரன்பே

    செல்வராகவன் இயக்கத்தில் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்த்து இந்த ஆண்டு வெளியான சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அன்பே பேரன்பே பாடலை சோனி மியூசிக் சவுத் யூடியூப் பக்கத்தில் 55 மில்லியன் ரசிகர்கள் பார்த்து கொண்டாடியுள்ளனர். உமா தேவி வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    3. கோமாளி – ஹாய் சொன்னா போதும்

    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய கோமாளி திரைப்படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நினைவுகளை அடுக்கிக் கொண்டு வெளியான ஹாய் சொன்னா போதும் 2019ம் ஆண்டின் டாப் 3 லிஸ்டில் கம்பீரமாக இடம்பெற்றுள்ளது.

    2. விஸ்வாசம் – கண்ணான கண்ணே

    விவேகம் படத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சிறுத்தை சிவா இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்துக்கு விஸ்வாசம் எனும் மெகா பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். இமான் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான். அஜித்தும் நயனும் ரொமான்ஸ் செய்யும் வானே பாடலும், இந்த இடத்திற்கு உகந்த பாடல் தான். ஆனால், அதை விட ஒரு படி மேல் சென்று, தந்தை மகள் பாசத்தை வெளிக்காட்டிய தாமரை வரிகளில் உருவான கண்ணான கண்ணே பாடல் பல குழந்தைகளுக்கு தாலாட்டாக மாறியிருப்பதை யாராலும் மறக்க முடியாது.

    1.பிகில் – உனக்காக வாழ நினைக்கிறேன்

    ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற உனக்காக காத்திருக்கிறேன் பாடல் 2019ம் ஆண்டு டாப் 10 பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுரா தாரா தல்லூரி குரலில் விவேக் வரிகளில் உருவான இந்த பாடலில் விஜய், நயன்தாரா கெமிஸ்ட்ரி ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவில் ரம்மியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்.

    English summary
    Year end comes, here is the list of 2019 top 10 tamil melody songs From Bigil to Nerkonda Parvai songs fill the table.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X