Ashok Selvan Marriage - அஜித், ஷாலினி ரூட்டில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன்.. இதுதான் லவ் ஸ்டோரி

சென்னை: Ashok Selvan Marriage (அசோக்செல்வன் திருமணம்) அஜித், ஷாலினி ரூட்டில்தான் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். அவர் ஹீரோவாக நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தின் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார்.

Here is The Love Story of Ashok Selvan and Keerthi Pandiyan

போர்த்தொழில்: அவரது கரியரிலேயே போர்த்தொழில் படம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான அப்படத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அசோக் செல்வன் மேற்கொண்டு பலரால் அறியப்படும் நடிகராக மாறிவிட்டார்.

திருமணம்: இந்த சூழலில் அவர் நடிகர் அருண் பாண்டியன் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்தார். அவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. இதனையடுத்து அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

Here is The Love Story of Ashok Selvan and Keerthi Pandiyan

லவ் ஸ்டோரி: இந்த சூழலில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் லவ் ஸ்டோரி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது இரண்டு பேரும் இணைந்து நடித்தபோதுதான் காதல் ஒர்க் அவுட் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை இருவரும் இணைந்து நடித்து ஒரு படமும் ரிலீஸாகவில்லையே என ரசிகர்கள் குழம்பினர். ஆனால் இனி ரிலீஸாகப்போகும் படத்தில் இருவரும் நடித்திருக்கின்றனர்.

அதாவது பா.இரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் இயக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இதில் சாந்தனுவும் நடிக்கிறார். அந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியனும் நடித்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர் என்ற தொனியில் அசோக் செல்வனுடன் பழக ஆரம்பித்த கீர்த்தி பாண்டியனுக்கு அசோக் செல்வனின் அழகு மட்டுமின்றி குணத்தையும் பிடித்திருக்கிறது.

Here is The Love Story of Ashok Selvan and Keerthi Pandiyan

அதேபோல் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனை பிடிக்க ஒருவழியாக இரண்டு பேரும் காதலை சொல்லி சம்மதம் வாங்கி திருமணம் செய்திருக்கின்றனர். அஜித்தும் ஷாலினியும்கூட இதேபோல் அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது காதலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X