Nayanthara Salary - ஜவான் கொடுத்த வெற்றி.. அடுத்த ஹிந்தி படத்துக்கு நயன்தாரா சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா

சென்னை: Nayanthara Salary (நயன்தாரா சம்பளம்) ஜவான் கொடுத்த வெற்றிக்கு பிறகு அடுத்ததாக நயன்தாரா இன்னொரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் மீறி இப்போது கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இரண்டு காதல் தோல்விகளை அவர் சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.

Here is the Nayantharas Next Bollywood Movie Salary Details

திருமணம்: பல வருடங்கள் காதலித்த இரண்டு பேரும் கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். பிரமாண்டமாக திருமணம் நடத்தியது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து பலரது பாராட்டையும் பெற்றனர். திருமணம் ஆன நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

உலக், உயிர்: நயன் எதை செய்தாலும் அதை சர்ச்சையாக்குவது வழக்கமாகிவிட்டதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதையும் சர்ச்சையாக்கினார்கள். ஆனால் அதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வாடகை தாய் விவாகரத்தில் எந்த விதிமீறலும் நிகழவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து ஒரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் பெயர் வைத்தார்கள்.

ஹிந்தியில் என்ட்ரி: இந்த சூழலில் தமிழில் மட்டும் நடித்துவந்த நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் எண்ட்ரி ஆனார். அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் தனது கொள்கையை தளர்த்திக்கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. ஜவான் ஹிட்டானால் ஹிந்தியில் பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டிருந்தார் நயன்.

சம்பளம்: அவர் போட்ட கணக்கு சரியாக வந்திருக்கிறது. ஜவான் படம் தமிழ்நாட்டில் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நயன்தாராவின் நடிப்பும் நல்லபடியாகவே பேசப்பட்டது. இதனையடுத்து அவர் சஞ்சய் லீலா பன்சாலில் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் அந்தப் படத்துக்காக நயன் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜவான் படத்துக்காக பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற அவர் இந்த படத்துக்காக 13 கோடி ரூபாயிலிருந்துதான் சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கிறார் என்றும் அநேகமாக அவர் கேட்ட சம்பளம் கிடைத்துவிடும் என்றும் பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X