Big Boss 7 - பிக்பாஸ் 7.. போட்டியாளர்களின் புதிய லிஸ்ட் இதுவா?.. வீடுகள் இந்த முறை களைகட்டப்போகுது

சென்னை: Big Boss 7 Contestents (பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்) பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசனில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனிலிருந்தே இந்நிகழ்ச்சியின் டிஆர்பி உச்சத்தில்தான் இருக்கும். வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள் என அனைத்தும் வேறு லெவலில் இருக்கும். ஏற்கனவே அறிமுகம் ஆனவர்களுடனும், அறிமுகம் ஆகாதவர்களுடனும் நூறு நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பது பெரிய டாஸ்க் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியிருக்கிறது.

Here is The New Contestents List Of Big Boss 7

பிக்பாஸ் 6: கடந்த சீசனில் ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே தனது மகனின் உடல்நிலையை காரணம் காட்டி ஜிபி முத்து தாமாகவே வெளியேறினார். இதனால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக இனி பார்க்க வைப்பதற்கு வீட்டில் யாருமே இல்லை என நினைத்தனர். ஆனால் தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்டோரால் கடந்த சீசன் சூடு பிடித்தது.

அசீம் டைட்டில் வின்னர்: ஆறாவது சீசனில் ஷிவினுகும், விக்ரமனுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக அறம் வெல்லும் என்ற வார்த்தையை விக்ரமனுக்காக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால் கடைசியில் அசீம் பிக்பாஸ் ஆறாவது சீசன் டைட்டிலை வென்றுவிட்டு சென்றார். விக்ரமன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் 7: இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போது ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போவதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கமல் ஹாசன் அறிவித்திருந்தார். அது என்ன இரண்டு வீடு என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இப்போதே ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

போட்டியில் யார் யார்?: பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

புதிய லிஸ்ட்: இதற்கிடையே பயில்வான் ரங்கநாதனும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் மேற்கூறியவர்களுடன் இன்னும் இரண்டு பேர் கலந்துகொள்வார்கள் என தற்போது கூறப்படுகிறது. அதன்படி விஜே பாவனா மற்றும் கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோரும் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X