Leo - லியோ இசை வெளியீட்டு விழா.. ஒரு வழியாக முடிவுக்கு வந்த படக்குழு.. விஜய் எடுத்திருக்கும் முடிவு இதுவா?
சென்னை: Leo Audio Launch (லியோ இசை வெளியீட்டு விழா) லியோ இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ க்ளிம்ப்ஸ்: லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆம் தேதி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில் படுமாஸாக தோன்றினார் சஞ்சய். மேலும் அவர் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை படத்தில் ஏற்றிருப்பது க்ளிம்ப்ஸ் மூலம் உறுதியாகியிருக்கிறது. அதேபோல் கடந்த 15ஆம் தேதி அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தொடர்பான க்ளிம்ப்ஸும் வெளியிடப்பட்டது. ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை அர்ஜுன் ஏற்றிருக்கிறார்.
ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியானது. ஆனால் வெளிநாட்டில் நடத்தினால் தமிழ் ரசிகர்களிடம் நெகட்டிவ் தாட் எழுந்துவிடும் என படக்குழு எண்ணுவதாகவும் அதன் காரணமாக தமிழ்நாட்டில் நடத்தும் முடிவுக்கு படக்குழு இப்போது வந்திருப்பதாக கூறப்படுகிறது.
எப்போது ஆடியோ ரிலீஸ்?: இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். அதேபோல் ஆடியோ வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக ரஜினிக்கு குட்டிக்கதை மூலம் பதிலடி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி எந்த கதையும் சொல்வதற்கு விஜய்யிடம் ஐடியா இல்லை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











