Ajith - விடாமுயற்சியை விடுங்க... அஜித்தின் புதிய இயக்குநர் இவரா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை: Ajith(அஜித்) விடாமுயற்சி படத்தின் அப்டேட்டே இன்னும் வெளியாகாத சூழலில் அஜித்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எப்போதும் ஒரு படத்தை நடித்து முடித்த பிறகே தனது அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்விதமாக துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன் 62ஆவது படத்தில் கமிட்டானார்.

விடாமுயற்சி: அதன்படி முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். தமிழ் சினிமாவில் நல்ல இயக்குநர்கள் பட்டியலில் அவரும் இருப்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
எப்போது ஷூட்டிங்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் பட பெயர் அறிவித்ததோடு சரி அடுத்தக்கட்டமாக படம் எந்த நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்றுகூட ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதனால் வலிமை படத்துக்கு எப்படி அப்டேட் கேட்டு காத்திருந்தார்களோ அதேபோல் இப்போதும் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள்.
பைக் பயணம்: சூழல் இப்படி இருக்க அஜித்குமாரோ பைக் பயணத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தனது பைக் பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். இதற்கிடையே இந்த மாத இறுதியில் அபுதாபியில் ஷூட்டிங் தொடங்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அஜித் இப்போது சென்னை வந்திருப்பதால் சென்னையிலாவது ஷூட்டிங் தொடங்குமா என்று ஒருபக்கம் கேள்வி எழுந்திருக்க; மறுபக்கம் அவரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

யார் இயக்குநர்?: அந்தவகையில் விடாமுயற்சிக்கு பிறகு அவர் மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனும் நடித்திருந்தார். அப்போது அவரிடம் அஜித், நீ பெரிய படத்தை இயக்குவாய் என்று ஊக்கமளித்தார். அதனை ஆதிக்கும் மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் கூறினார். அதுமட்டுமின்றி எனது இந்த தனிப்பட்ட வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறியிருந்தார்.
எனவே அஜித்தை அவர் விரைவில் இயக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அஜித் ரசிகர்களோ முதலில் விடாமுயற்சியின் நிலைமை என்னனு தெரியட்டும் அதற்கு பிறகு இதை பற்றி பேசிக்கொள்ளலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











