Ajith Salary - என்னது அஜித்துக்கு இவ்வளவு சம்பளமா?.. விஜய்யை நெருங்கிடுவார் போல
சென்னை: Ajith Salary (அஜித் சம்பளம்) அஜித் தனது 63ஆவது படத்துக்காக வாங்கவிருப்பதாக ஒரு சம்பள தொகை கூறப்படுகிறது.
துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாகிவருகின்றனர். இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ ரசிகர்கள் அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார்.
விடாமுயற்சி ஷூட்டிங்: இதனையடுத்து லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போயிருப்பதகா கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனியும் திரைக்கதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அந்த கேப்பை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்தார்.
அஜர்பைஜானில் ஷூட்டிங்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த படம்: சூழல் இப்படி இருக்க அஜித்தின் 63ஆவது படம் குறித்த தகவலும் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படத்துக்காக அஜித் வாங்கவிருப்பதாக ஒரு சம்பள தொகை ஒன்று கூறப்படுகிறது. அதாவது அவர் 160 கோடி ரூபாய் சம்பளமாக பெறவிருக்கிறாராம்.

ஆனால் அந்தத் தகவலில் பெரும்பாலும் உண்மை இல்லை என்றே கருதப்படுகிறது. ஏனெனில் விஜய்க்கு அவரது 68ஆவது படத்தில் 175 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்பட்டது. அதற்கு காரணம் அவரது படங்கள் தொடர்ந்து வணிக ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெறுகிறது. ஆனால் அஜித்துக்கு விஜய் அளவு வியாபாரம் நடக்கவில்லை. எனவே அஜித்துக்கு 160 கோடி ரூபாய் சம்பளம் என்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திரைத்துறையில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











