Vidaamuyarchi - லைகாவிடம் அஜித் வைத்த கோரிக்கை இதுவா?.. விடாமுயற்சியில் என்னெல்லாம் நடக்குது பாருங்க
சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி ஷூட்டிங் நடந்துவரும் சூழலில் லைகா நிறுவனத்திடம் அஜித் புதிய கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கி வெற்றி பெற்றது. குறிப்பாக விமர்சன ரீதியாக வாரிசு படத்தைவிட ஒரு படி மேலே துணிவு இருந்ததாக பலரும் தெரிவித்தனர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அஜித்குமார்.

மகிழ் திருமேனி: ஆனால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறியதை அடுத்து மகிழ் திருமேனி இயக்குநராக உள்ளே வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பல மாதங்கள் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கும் சூழலில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.
படத்தில் இவர்களா?: இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ப்ரியா பவானி ஷங்கர்கூட அஜர்பைஜான் நாட்டில் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்ததால் அவரும் இதில் இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதனால் ஒளிப்பதிவு தரமாக இருக்கும் என ஏகே ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
வெளியான புகைப்படம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் நீரவ் ஷாவும் படக்குழுவினரும் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் அவர்கள் வறண்ட நிலத்தில் நின்றுகொண்டிருந்தனர். மேலும் ஒரு வீடியோவும் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விடாமுயற்சி திரைப்படம் தரமான ஆக்ஷன் படமாக வெளியாகவிருப்பது உறுதிதான் என கூறிவருகின்றனர்.
மிலன் மரணம்: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநராக மிலன் பணியாற்றினார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் அஜர்பைஜானில் ஷூட்டிங்கில் இருக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அவர் அஜித் நடித்த பில்லா, விஸ்வாசம், துணிவு உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக இருந்திருக்கிறார். அவரது உயிரிழப்பு படக்குழுவை பாதித்தாலும் ஷூட்டிங்கை நடத்தி முடித்து விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் மகிழ் இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் கோரிக்கை: இந்நிலையில் லைகா நிறுவனத்துக்கு அஜித்குமார் புதிய கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, மிலன் மரணத்தை அடுத்து அதிர்ச்சியடைந்த அஜித்குமார் ஒட்டுமொத்த படக்குழுவின் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஒரு ஸ்பெஷல் மெடிக்கல் கேம்ப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











