Anirudh - மியூசிக் மூலம் பத்து கோடி ரூபாய்.. ஹோட்டல் வருமானம் இவ்வளவா?.. அனிருத்தின் வருமானம் தெரியுமா?

சென்னை: அனிருத் தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவரது ஹோட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அனுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

 Here is the New Details about Anirudh Hotel Business

முன்னணி ஹீரோக்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். இந்தியன்2வில் கூட அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

ஹிந்தியில் அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேற்கொண்டு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின. மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், தெலுங்கில் தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக இசையமைக்க கமிட்டாகியிருக்கிறார்.

தொழில்: ஒரு படத்துக்கு அவர் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சூழலில்; ஹோட்டல் தொழில் ஒன்றையும் அவர் நடத்திவருகிறார். அதன்படி சம்மர் ஹவுஸ் ஈட்டறி என்ற ஹோட்டலை தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதில் சாதாரண காஃபியின் விலையே 30 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சூப் வகைகளின் விலை ஆரம்பமே 200 ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லட்சங்களில் லாபம்: முழுக்க முழுக்க எலைட் மக்களுக்கான ஹோட்டலாக இதை அனிருது நடத்திவருகிறாராம். அதனால் லெமன் டீ 100 ரூபாய், பாஸ்தா, கேக் வகைகள் 300 ரூபாய் என விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மலைப்பை ஏற்படுத்துமாம். மேலும் இந்த ஹோட்டல் தொழில் மூலம் அனிருத் லட்சங்களில் லாபம் பார்த்துவருவதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X