திருமணம் செய்துகொள்ளப்போகிறாரா அனுஷ்கா?.. அவர் வீட்டிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதோ?

ஹைதராபாத்: Anushka Marriage (அனுஷ்கா திருமணம்) நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

Here is the new details about Anushka Shetty Marriage


பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.

குறைந்த வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.

செகண்ட் இன்னிங்ஸ்: இந்த சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது.

திருமணம்: இந்த சூழலில் அனுஷ்காவுக்கு 42வயது ஆகிறது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம் தெலுங்கு நடிகர் பிரபாஸை அவர் தீவிரமாக காதலிப்பதாகவும் ஆனால் பிரபாஸ் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அனுஷ்காவின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிரபாஸ் வீட்டில் தற்போது காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகவும் அடுத்த வருடம் பிரமாண்டமான முறையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X