GOAT அப்டேட்.. லண்டன் பறந்த வெங்கட் பிரபு.. மனுஷன் பம்பரமாய் வேலை பார்க்கிறாரே

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவருகிறது GOAT படம். விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை படத்துக்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்திருந்திக்கிறார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

Here is the New Details about GOAT Movie Update

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்‌ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.

பக்ரீத் ரிலீஸ்: படத்தை பக்ரீத்துக்கு திரைக்கு கொண்டு வர வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக கடுமையாக உழைப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு இயக்குநர் ஷூட்டிங்கின்போது சுறுசுறுப்பாக இருந்தால் அவரை விஜய்க்கு பிடித்துவிடும் என்று அவருடன் பணியாற்றியவர்களும், திரைத்துறையினரும் கூறுவார்கள். அதன்படி வெங்கட் பிரபுவின் வொர்க்கிங் ஸ்டைலை பார்த்த விஜய் அவரை தன்னுடைய குட் புக்கில் இடம்பெற செய்துவிட்டார் என்றும் தெரிகிறது.

லண்டன் பறந்த வெங்கட் பிரபு: இந்நிலையில் GOAT படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை 3 ஷெட்யூல்கள் ஷூட்டிங்கை முடித்திருக்கும் அவர், யுவன் ஷங்கர் ராஜாவுடன் லண்டனுக்கு சென்று இரண்டு பாடல்களை பதிவு செய்துவிட்டாராம். அதை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கான செட் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X