Thug Life - தக் லைஃப் படத்தை இழுத்தடிக்கும் கமல் ஹாசன்?..விரக்தியில் மணிரத்னம்?.. என்ன ஆண்டவரே இதெல்லாம்?

சென்னை: கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து சினிமாவில் பிஸியான கமல் ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த சூழலில் தக் லைஃப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் அரசியல் வாசத்துக்கு பிறகு மீண்டும் கலை வாசத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்த அவர் அதில் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது.

Here is the New Details about Kamal Haasans Thug Life Shooting Update

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரங்கராய சக்திவேல் நாயக்கன்: அதன்படி படத்தின் இன்ட்ரோ வீடியோ அன்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.படத்துக்கு தக் லைஃப் (Thug Life) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். இந்த சூழலில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக தொடங்கிவிடும் என்று தகவல்கள் வெளியாகி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

புதிய சிக்கல்: இந்நிலையில் தக் லைஃப் படத்துக்கு புதிய சிக்கல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது பிக்பாஸ் ஷூட்டை முடிக்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. எனவே அதை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுக்க கமல் ஹாசன் திட்டமிட்டிருக்கிறாராம். அதனால் இந்த மாத இறுதியில் தொடங்குவதாக இருந்த தக் லைஃப் ஷூட்டிங்கை இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளி வைக்க மணிரத்னத்திடம் கமல் ஹாசன் கேட்டிருப்பதாகவும்; அதனால் மணிரத்னம் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X