Lal Salaam - மகளால் ரஜினிக்கு வந்த சோதனை இதுவா?.. அவரே களத்துல இறங்கிட்டாரே.. அய்யோ பாவம்

சென்னை: ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்தார்.

3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே லால் சலாம் படத்தில் கமிட்டாகிவிட்டார் ரஜினிகாந்த்.

Here is the New Details about Lal Salaam Movie

மொய்தீன் பாய்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

க்ளிம்ப்ஸ்: ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி படத்திலிருந்து அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. பக்கா ஆக்‌ஷன் காட்சிகள் அவருக்கு இருக்கின்றன. படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள்வரை அவர் வருவார் என ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் சூழலில் அந்த 50 நிமிடங்களும் மாஸாக இருக்கும் என்பதை க்ளிம்ப்ஸ் காட்சிகள் உணர்த்தின. அதேபோல் படத்திலிருந்து இதுவரை வெளியான இரண்டு சிங்கிள்களுமே நால்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

எப்போது ரிலீஸ்?: லால் சலாம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவிருந்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை படத்தின் ரிலீஸ் தேதி திடீரென தள்ளிப்போனது. படத்தின் சில பணிகள் மிச்சம் இருந்ததால்தான் ரிலீஸ் தள்ளிப்போனதாக பரவலாக பேசப்பட்டது. இந்த சூழலில் படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு வேறு காரணம் ஒன்றும் கூறப்படுகிறது.

என்ன காரணம்?: அதாவது லால் சலாம் படத்தின் டிஜிட்டல் உரிமையை எந்த நிறுவனமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் ரிலீஸ் தள்ளிப்போனதாம். இதனை கவனித்த ரஜினிகாந்த் தனது மகளுக்காக சன் டிவி நிறுவனத்திடம் நேரடியாக ஃபோன் செய்து லால் சலாம் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாராம். சன் டிவியும் அதற்கு ஒத்துக்கொண்டதாம்.

இதனால்தான் படத்தில் ரிலீஸ் தள்ளிப்போய்விட்டதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இதற்கிடையே லால் சலாம் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டார் என்றும் படத்தை பார்த்துவிட்டு ஐஸ்வர்யாவிடம், 'இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் பயப்படவே வேண்டாம்' என்று சொன்னதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X