Leo Update - ஒரே நாள்தான்.. ஜெயிலர் பட சாதனையை அசால்ட்டாக காலி செய்த லியோ

சென்னை: Leo Update(லியோ அப்டேட்) ஜெயிலர் படம் செய்த சாதனையை லியோ படம் ஒரே நாளில் முந்திவிட்டதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது கட்டாயமாக அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Here is the New Details about Leo Movie Pre Booking in UK

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜுலை மாதம் அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.

அப்டேட்ஸ்: லியோ படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் படத்தின் அப்டேட்டுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி தெலுங்கு, கன்னடம் போஸ்டர்கள் வெளியாகின. சமீபத்தில் தமிழ் போஸ்டர் வெளியானது. அதில் சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக விஜய் பிடிப்பது போன்று இருந்தது. வரிசையாக வெளியாகும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். ஏனெனில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி குட்டி கதை ஒன்றை கூறினார். அதை சிலர் விஜய்க்கு எதிராக ரஜினி பேசிவிட்டார் என்றனர். எனவே அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய்யும் குட்டி கதை சொல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது தளபதி ரசிகர்களிடம்.

ப்ரீ புக்கிங்: லியோ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் சாதனையை லியோ படம் ஒரெ நாளில் முந்திவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது UKயில் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் முதல் நாளில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்ம் 2,22,777 யூரோக்கள் (இந்திய மதிப்பில் (இரண்டு கோடியே 26 லட்சத்து 37 ஆயிரத்து 462 ரூபாய்) வசூலித்ததாகவும்; தற்போது லியோ திரைப்படம் 2,23,005 யூரோக்கள் (இந்திய மதிப்பில் இரண்டு கோடியே 26 லட்சத்து 64 ஆயிரத்து 299 ரூபாய்) வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதியின் மாஸை பார்த்தீர்களா என உற்சாகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X