Leo Update - லியோ படத்தில் இருக்கும் ரெட்ரோ பாடல் எது தெரியுமா?.. இந்தப் பாடலும் வேற லெவல்தான்
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தில் ஒரு ரெட்ரோ பாடல் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கியிருக்கும் நான்கு படங்களுமே ஹிட்டடித்திருக்கின்றன. முதல் படத்திலிருந்தே தனது திரைக்கதையில் மேஜிக் செய்யும் அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பெரும்பான்மையான நடிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய உண்மை.

ட்ரெண்ட் செட்டர்: திரைக்கதையில் தனக்கென சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கியிருக்கிறார். அந்த முறை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிது. விக்ரம் படத்தில் கைதி கேரக்டர்களை கொண்டு வந்ததுபோல் இப்போது விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் லியோ படத்திலும் தனது முந்தைய பட கேரக்டர்களை கொண்டுவருவார் என்று ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர்.
ரெட்ரோ பாடல்கள்: திரைக்கதையில் எப்படி ஒரு ட்ரெண்டை செட்டாக்கியிருக்கிறாரோ அதேபோல் தன்னுடைய படங்களில் ரெட்ரோ பாடல்களை பயன்படுத்துவது வழக்கம். கைதியில் மறுபடியும் படத்தில் இடம்பெற்ற ஆசை அதிகம் வெச்சு பாடலை பயன்படுத்தினார். அதேபோல் விக்ரம் படத்தில் மன்சூர் அலிகான் நடனமாடிய வத்திக்குச்சி பத்திக்குச்சு பாடலை பயன்படுத்தியிருந்தார். அவர் படங்களில் அந்த பாடல்களை பயன்படுத்தியதால் மீண்டும் அந்தப் பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன.
லியோ: இந்த சூழலில் அவர் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ரிலீஸுக்கு நாட்கள் நெருங்க நெருங்க படத்தின் மீதான உச்சக்கட்ட எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் இந்தப் படம் எல்சியூவில் வருமா?.. விஜய் டபுள் ஆக்ஷனா?.. என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

லியோவில் ரெட்ரோ: அதேபோல் இந்தப் படத்தில் எந்த ரெட்ரோ பாடலை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியிருக்கிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சத்யராஜ் நடித்த வில்லாதி வில்லன் படத்தில் இடம்பெற்ற தீம்தலக்கடி தில்லாலே காத்தடிப்பது யாராலே என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் அளித்த ஒரு பேட்டியில்கூட அந்தப் பாடல் தனக்கு ரொம்பவெ பிடிக்கும் என கூறியிருந்ததால் இந்தப் பாடலை பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications