Leo Update - விஜய்யுடன் களமிறங்கும் சிங்கம்.. லியோவில் முக்கியமான சீனே இதுதானா?.. புதிய தகவல்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் முக்கியமான காட்சி குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

தமிழின் டாப் ஹீரோவான விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் ரேஸில் இருக்கிறார்.அதற்கு காரணம் அவரது படங்கள் பெரும்பாலும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடுகின்றன. இருந்தாலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகியவை விமர்சன ரீதியாக கடும் விமர்சனத்தையும், ட்ரோலையும் சந்தித்தன. எனவே விமர்சனம்,வணிகம் ஆகிய இரண்டு ரீதியிலும் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார் விஜய்.

Here is the new details about Leo Movie Scene

லியோ: அதனை பூர்த்தி செய்ய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அதைவிட அதிக ரெஸ்பான்ஸை இந்தப் படம் பெறும் என்ற நம்பிக்கை தளபதி ரசிகர்களிடம் இருக்கிறது.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. விஜய்யும் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார் என்று தெரிகிறது. எனவே படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

ஆடியோ ரிலீஸ் ரத்து: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விழா நடக்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் வெளியானது. அந்தப் பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் லியோ படத்தின் முக்கியமான காட்சி என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

என்ன காட்சி: அதாவது லியோ என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் சிங்கம். எனவே இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் விஎஃப்எக்ஸ் மூலம் ஒரு சிங்கத்தை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சில காட்சிகளில் அந்த சிங்கமும் தோன்றும் என கூறப்படுகிறது. முக்கியமாக ஒரு காட்சியில் விஜய் எதிரிகளுடன் சண்டையிடும்போது படு மாஸாக அந்த சிங்கமும் தோன்றி விஜய்க்கு பக்கபலமாக இருக்கும்படியான காட்சியை லோகேஷ் அமைத்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X