Lokesh Kanagaraj - லோகேஷ் கனகராஜ் - ரஜினி படம் என்ன நிலைமையில் இருக்கிறது?.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜும், ரஜினிகாந்த்தும் இணையும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜின் க்ராஃபை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனால் அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் நடிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.

Here is the New details about Lokesh Kanagaraj - Rajini Movie

லியோவை முடித்த லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் தமிழ்நாடு, திருப்பதி என பல்வேறு இடங்களில் நடந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் ஷூட்டிங் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் விரைவில் டப்பிங் கொடுக்கவிருக்கிறார்.

லோகேஷின் அடுத்தக்கட்ட ப்ளான்: லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2வை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே ரஜினியை வைத்து அவர் இயக்குவார் என தகவல்கள் பரவின. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதுகுறித்து எதுவும் வராமல் இருந்தாலும் கிட்டத்தட்ட ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணைவது உறுதியாகிவிட்டது. லியோவில் நடித்த மிஷ்கின்கூட அதை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தியாவின் பிரமாண்ட படமாக அது அமையும் என்ற கருத்தும் நிலவுகிறது.

போட்டிப்போடும் தயாரிப்பு நிறுவனங்கள்: ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணையும் படத்தை தயாரிக்க மொத்தம் ஏழு நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ரேஸில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம்தான் ரஜினிக்கு கடைசி படமாக அமையலாம் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்.

Here is the New details about Lokesh Kanagaraj - Rajini Movie

வேலையை ஆரம்பித்த லோகேஷ்?: இந்நிலையில் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையவிருக்கும் படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, லியோ படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்.

எனவே இதற்கு இடைப்பட்ட நாட்களில் ரஜினியின் படத்துக்கான கதையில் சில வேலைளை தனது நண்பரும், இயக்குநருமான ரத்னகுமாருடன் இணைந்து ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைதி 2 படத்தை இயக்குவதற்கும் லோகேஷ் கமிட்டாகியிருக்கிறார். ரஜினி படத்தை முடித்துவிட்டுத்தான் கைதி 2வுக்கு அவர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X