Maamannan Collection - மாமன்னன் வசூல் எவ்வளவு?.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்தின் வசூல் நிலவரம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.
வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். நடிகராக வலம் வந்த உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர்.

மாமன்னனுக்கு குட் ரெஸ்பான்ஸ்: மாரி செல்வராஜின் படங்களில் சமத்துவமும், காத்திரமான அரசியலும் இருக்கும் என்ற டெம்ப்ளேட் இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. தனித்தொகுதி எம்.எல்.ஏ சாதி திமிர் உள்ளவர்களால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை எந்தவித சமரசமுமின்றி பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். குறிப்பாக வடிவேலுவும், ஃபகத் பாசிலும் தங்களது நடிப்பின் மூலம் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மெர்சல் செய்யும் இடைவேளை காட்சி: படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவுமே இடைவேளை காட்சியில் இருக்கிறது. வடிவேலு அந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு திரையரங்குகளில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் துள்ளி குதித்தும், விசிலடித்தும் கொண்டாடி தீர்த்தனர். அந்த அளவுக்கு அந்தக் காட்சியின் வீரியம் இருந்தது. அதேபோல் சபாநாயகராக வடிவேலு க்ளைமேக்ஸில் வரும் காட்சியும், அப்போது பேசும் வசனமும் கூஸ்பம்ப்ஸாக இருந்தது.
குவியும் பாராட்டு: மாமன்னன் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் ஆளுங்கட்சி அமைச்சரையே வைத்து இப்படிப்பட்ட அரசியலை பேசியதற்கு மாரி செல்வராஜுக்கு பெரிய பாராட்டு கிடைத்துவருகிறது. அதேபோல் எந்தத் தயக்கமும் இல்லாமல் இப்படிப்பட்ட கதையில் நடித்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டு குவிந்துவருகிறது.
50 கோடி ரூபாயை கடந்த வசூல்: இந்தச் சூழலில் படம் வெளியாகி ஒன்பது நாட்கள் முடிவில் 52 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த மாமன்னன் சக்சஸ் மீட் விழாவில் ஓபனாக கூறினார். இதனையடுத்து உதயநிதி நடித்த படங்களிலேயே மாமன்னன் தான் முதலில் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டிய படம் என்ற பெருமையை பெற்றுவிட்டதாக ரசிகர்கள் கூறினர்
லேட்டஸ்ட் தகவல்: இந்நிலையில் மாமன்னன் வசூல் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது 55 கோடி வசூலை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இன்னமும் படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்குக்கு செல்வதாலும், இனி ஜூலை 14ஆம் தேதிதான் புதிய படம் (மாவீரன்) ரிலீஸாகவிருப்பதாலும் மாமன்னன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











