Pa.Ranjith - போட்டது ஒரு பட்ஜெட் வந்தது ஒரு பட்ஜெட்.. என்ன தங்கலானில் இரஞ்சித் இப்படி செஞ்சிட்டாரு?
சென்னை: Thangalaan (தங்கலான்) தங்கலான் படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதைவிட அதிகம் வந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரம் விமர்சனத்தை தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்கலான் படத்தில் கமிட்டானார் இரஞ்சித்.

தங்கலான்: தங்கலான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பெரிய வெற்றி ஒன்றுக்காக பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கு இந்தப் படம் நிச்சயம் அதனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் சியானின் ரசிகர்கள்.
மிரட்டிய மேக்கிங் வீடியோ: விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். நிச்சயம் இந்தப் படம் மூலம் அவரது வெற்றி ஏக்கம் தீர்ந்துபோகும் என ஆரூடம் கூறுகின்றனர். அதேபோ தமிழ் சினிமாவின் உச்சக்கட்டமாக இந்தப் படம் அமையும் என்றும் அவர்கள் கணித்திருக்கின்றனர்.
ஷூட்டிங் ஓவர்: ஒகேனக்கல் பகுதியில் தொடங்கிய தங்கலான் ஷூட்டிங் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் மதுரையில் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் நடந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.
பட்ஜெட் எவ்வளவு?: இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது சின்ன பட்ஜெட் படமாகத்தான் திட்டமிட்டார்களாம். ஆனால் ஷூட்டிங் செல்ல செல்ல கதையின் தேவைக்காக பட்ஜெட் அதிகரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி ஷூட்டிங் முடியும்போது தங்கலான் பட்ஜெட் 100 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் பா.இரஞ்சித் எப்போதும் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் அவர் இப்படி பட்ஜெட்டை இழுத்துவிட்டாரே என கூறிவருகின்றனர். அதேசமயம் கதைக்கு தேவைப்பட்டிருக்கும் அதனால்தான் பா.இரஞ்சித் இந்த அளவுக்கு பட்ஜெட்டை இழுத்திருப்பார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
கதை என்ன?: இதற்கிடையே தங்கலான் படத்தின் கதை குறித்த பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது கோலார் தங்க வயலில் இருந்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் தங்கலான் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











