முழு வீச்சில் வேட்டையன் ஷூட்டிங்.. இப்போ எங்கே தெரியுமா?.. இதோ லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. ஜெய்பீம் படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த த.செ. ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது வேட்டையன் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து அதே உற்சாகத்துடன் தற்போது ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். ஞானவேல் அடிப்படையில் பத்திரிகையாளர் என்பதாலும், முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் என்பதாலும் ரஜினியை வைத்து எந்த மாதிரியான கதைக்களத்தை தொட்டிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

Here is the New Details about Rajinikanth Vettaiyan Movie

தொடங்கிய ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக களமாடுபவராக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அவர் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் ஜெய்பீம் போலவே இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

நட்சத்திர பட்டாளம்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஃபகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும்; அமிதாப் பச்சன் மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

வேட்டையன்: இப்படத்துக்கு தலைவர் 170 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஜினியின் 74ஆவது பிறந்தநாளையொட்டி கடந்த டிசம்பர் மாதம் படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில் ரஜினிகாந்த் கையில் லத்தியுடன் வந்து குறி வெச்சா இர விழணும் என்று அவர் பேசிய பஞ்ச் டயலாக் பெரும் வரவேற்பை பெற்றது. டைட்டில் டீசரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக மெகா ஹிட்தான் என்று கூறிவருகின்றனர்.

அதேசமயம் ரசிகர்களில் ஒருதரப்பினர், ஜெய்பீம் திரைப்படம் சமூகத்துக்கு தேவையான விஷயத்தை பேசியது. எனவே ஞானவேலின் அடுத்தடுத்த படங்களும் அப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வேட்டையன் டைட்டில் டீசரை பார்க்கும்போது ஞானவேலுவும் கமர்ஷியல் வலையில் சிக்கிக்கொண்டாரோ என்று சந்தேகத்தை எழுப்பினர்.

வேட்டையன் ஷூட்டிங்: இந்நிலையில் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்போது படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்துவருவதாகவும் அங்கு ரஜினிகாந்த், ஃபகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் சிஜி காட்சிகள் அதிகம் இருக்கிறதாம். எனவே அந்தப் பணிகளை முடித்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X