Vettaiyan - வேட்டையன் டீசர்.. ரஜினி செய்தது கிராஃபிக்ஸ்லாம் இல்லையாம்.. அந்த கண்ணாடியின் விலை இவ்வளவா?
சென்னை: Vettaiyan (வேட்டையன்) வேட்டையன் படத்தின் டீசரில் இடம்பெற்ற ஒரு காட்சி குறித்து ரசிகர்கள் ஆதாரத்தை அடுக்கி வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து அதே உற்சாகத்துடன் தற்போது ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.

ஞானவேல் அடிப்படையில் பத்திரிகையாளர் என்பதாலும், முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் என்பதாலும் ரஜினியை வைத்து எந்த மாதிரியான கதைக்களத்தை தொட்டிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
தொடங்கிய ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக களமாடுபவராக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அவர் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் ஜெய்பீம் போலவே இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திர பட்டாளம்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஃபகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும்; அமிதாப் பச்சன் மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.
வேட்டையன்: இப்படத்துக்கு தலைவர் 170 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஜினியின் 74ஆவது பிறந்தநாளையொட்டி நேற்று படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில் ரஜினிகாந்த் கையில் லத்தியுடன் வருகிறார். மேலும் குறி வெச்சா இர விழணும் என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். அந்த டயலாக் பேசும்போது கையில் கூலர்ஸ் கண்ணாடியை வைத்திருக்கும் அவர் அதனை தான் ஏற்கனவே அணிந்திருக்கும் சாதாரண கண்ணாடியில் தூக்கிப்போட்டு ஒட்ட வைக்கிறார்.
செம ஸ்டைல்: இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள்; தலைவர் இதுவரை செய்ததிலேயே இந்த ஸ்டைல் புது மாதிரி இருக்கே என சிலாகித்துவருகின்றனர். அதேசமயம் அது பக்காவான கிராஃபிக்ஸ் காட்சி என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிஅலியில் அதற்கு பதிலடி தரும் விதமாக ரஜினி ரசிகர்கள், அது கிராஃபிக்ஸ்லாம் இல்லை. Magnetic Clip on Glasses வகையை சேர்ந்த கண்ணாடி.
ஜெயிலர் படத்தில் எப்படி சிகாரை வாயில் தூக்கிப்போடுவது ஒரிஜினலாக இருந்ததோ அதேபோல்தான் இதையும் தலைவர் செய்திருப்பார். அந்தக் கண்ணாடியின் விலை 3000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது என ஆதாரத்தை அடுக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











