Simbu - சிம்பு - தேசிங்கு பெரியசாமி கூட்டணியின் வேற மாதிரி ப்ளான்.. பக்கா ஸ்கெட்ச்சோட இறங்கிட்டாங்களே
சென்னை: Simbu (சிம்பு) சிம்புவும் தேசிங்கு பெரியசாமியும் இணைந்திருக்கும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான சிம்பு சில காரணங்களால் கோலிவுட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, உடல் எடையை குறைத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

அதன்படி அவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாயை வசூலித்தது.
வெந்து தணிந்தது காடு: அந்தப் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக படத்தில் சிம்புவின் நடிப்பு அட்டகாசமாக இருந்ததாகவும்; அவர் இனிமேல் சறுக்கவே மாட்டார் என்ற நம்பிக்கையை கொடுத்ததாகவும் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
சின்ன சறுக்கல்: இரண்டாவது இன்னிங்ஸில் வரிசையாக இரண்டு படங்கள் ஹிட்டானதை அடுத்து ஹாட்ரிக் வெற்றி கனவுடன் பத்து தல வெளியானது. ஆனால் படம் சறுக்கிவிட்டது. இருந்தாலும் சிம்புவின் நடிப்பு பன்மடங்கு பக்குவப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அந்தப் படத்தை எஸ்டிஆரின் ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினார். இதனையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு.
கமல் தயாரிப்பு: எஸ்டிஆரின் 48ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். கமல் தயாரிப்பில் சிம்பு முதன்முறையாக நடிப்பதால் கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என உறுதியாக நம்புகின்றனர். அதுமட்டுமின்றி இந்தக் கதை ரஜினிக்கு எழுதிய கதை என்பதாலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
முழு மூச்சில் சிம்பு: இந்தப் படத்துக்காக சிம்பு கடுமையாக உழைத்துவருகிறார் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தக் கதைக்காக அவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட சில கலைகளை கற்றிருக்கிறார். மேலும் இந்தப் படம் பீரியட் படமாக உருவாகப்போகிறது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
துல்கர் சல்மான்: அதன்படி இப்படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மானும் இந்தப் படத்தில் இணையும்பட்சத்தில் கேரளாவில் படம் வியாபாரம் ஆவதற்கு ஏதுவாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். ஏற்கனவே அவர் தமிழில் சூர்யாவுடன் புறநானூறு, கமலுடன் தக் லைஃப் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











