Sivakarthikeyan -சிவகார்த்திகேயனுக்கு சோதனை காலம்..படத்துக்கு புதிய பிரச்னை?..கமலும் கையை விரிச்சிட்டாரா?
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்துக்கு புதிய விதமாக பிரச்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். திறமையின் துணை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். கமர்ஷியில் பாதையை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக செல்லும் சிவகார்த்திகேயன் கடைசியாக தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார்.

பிரின்ஸ்: தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தும் நோக்கத்தில் பைலிங்குவலாக உருவான பிரின்ஸ் படத்தில் நடித்தார் எஸ்.கே. ஆனால் அவரது எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திலேயே திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டது. இதனால் டாக்டர், டான் என வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.
மாவீரன்: பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்தார் சிவர்கார்த்திகேயன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்துக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார் அவர். இதில் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பயோபிக்: இந்தப் படமானது ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளை ஷூட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் யாரும் ஃபோன் யூஸ் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
கமல் அப்செட்: வீடியோ லீக்கானதால் கமல் ஹாசனும் கொஞ்சம் அப்செட் அடைந்திருப்பதாக கூறப்படுகிரது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தின் பட்ஜெட் போட்டத்தைவிட 25 கோடி ரூபாய் அதிகம் ஆகிவிட்டதாகவும் அதனால் அந்தத் தொகையில் ஒரு அளவை சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கமல் ஹாசன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தொடர் சிக்கல்: முன்னதாக சிவகார்த்திகேயன் மீது இமான் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை திரையுலகில் ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் எஸ்கே 21 படத்துக்கு கமல் ஹாசன் பட்ஜெட் விஷயத்தில் கைவிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியதை பார்த்த ரசிகர்கள் எஸ்கே அண்ணாவுக்கு இது சோதனைக்காலம் போல என புலம்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











