Sivakarthikeyan - ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி.. முதலில் நடிக்க வேண்டியது அவரா?

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) ஏ.ஆர்.முருகதாஸும், சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு மாவீரன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவாவுடன் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்ததால் மாவீரன் படம் கண்டிப்பாக ஹிட்டாக வேண்டும் என்ற கட்டாயம் சிவாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இருந்தது.

Here is the New Details about Sivakarthikeyan Murugadoss Movie

மெகா ஹிட்: அவர்கள் எதிர்பார்த்தபடியே படம் மெகா ஹிட்டானது. கமர்ஷியலோடு சேர்ந்து சமூக அக்கறையுள்ள விஷயமும் படத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் நடிப்பில் வேரியேஷன் இருந்ததால் ரசிகர்கள் ரொம்பவே எஞ்சாய் செய்தனர். படத்துக்கும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் குட் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

எஸ்கே 21: மாவீரனில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே தனது 21ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது. சாய் பல்லவி கதாநாயகியாக கமிட்டாகியிருக்கிறார். மாவீரன் கொடுத்த ஹிட் வைப்பை இந்தப் படத்திலும் சிவா தொடர்வார் என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஷூட்டிங்: இந்தப் படமானது இந்திய ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை தழுவித்தான் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான முதல் ஷெட்யூல் காஷ்மீரில் தொடங்கியது. ஆனால் சில பிரச்னைகளால் தமிழகம் திரும்பியது படக்குழு. இரண்டாவது முறை பக்கா பிளானோடு சென்று 75 நாட்கள் காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்திருக்கிறது எஸ்கே 21 குழு. இதுதொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

முருகதாஸ் கூட்டணி: இதற்கிடையே சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் கதையை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் ஷாருக்கானிடம் சொல்லி அது அவருக்கு பிடித்து ஷூட்டிங் போக தயாராக இருந்தார்கள்; ஆனால் ஏதோ காரணத்தால் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. தற்போது அந்தக் கதையைத்தான் சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்குகிறார் என்று தகவல் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X