Ayalaan Release - சோதனை மேல் சோதனை.. அயலானுக்கு வந்த சிக்கல்.. குழப்பத்தில் சிவகார்த்திகேயன்?
சென்னை: Ayalaan Release (அயலான் ரிலீஸ்) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல் ஹாசன் படத்தை தயாரிக்கிறார்.

அயலான்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
பொங்கலுக்கு ரிலீஸ்: படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தவுடன் சிவாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி படமானது பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பது உறுதியாகியிருக்கிறது. ஏலியன்களை பற்றிய படம் என்பதால் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு குறை இருக்காது என்றே ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
கடும் போட்டி: ஆனால் அயலான் படம் ரிலீஸாகும் பொங்கலுக்கு ரஜினி நடித்திருக்கும் லால் சலாம், தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனை 4 ஆகிய படங்களும் ரிலீஸாவதால் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயலான் ரிலீஸுக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது அயலான் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸுக்கு முன்னதாகவே பணம் கொடுக்காது. மாறாக படம் ரிலீஸான பிறகு வரும் லாபத்தில் தனக்கு தேவையான கமிஷனை எடுத்துக்கொண்டுதான் பணத்தை கொடுப்பார்கள்.
சூழல் இப்படி இருக்க அயலான் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிக்காகவே பெரும் தொகையை படத்தயாரிப்பு நிறுவனம் செலவழித்துவிட்டதால் இப்போது ரிலீஸுக்கு தேவையான பணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் லால் சலாம் படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது. எனவே அயலானுக்கு தொடர்ந்து இதே சிக்கல் நீடித்தால் முதலில் லால் சலாமை ரிலீஸ் செய்துவிட்டு அயலானை பின்னர் ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் ரெட் ஜெயண்ட் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சிவகார்த்திகேயன் குழப்பத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே இந்தப் படத்தால் அவருக்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கை கொடுக்குமா ரெட் ஜெயண்ட் மூவிஸ்..


Click it and Unblock the Notifications











