Rajamouli - ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?. சர்வதேச அளவுல போய்ட்டாங்க

சென்னை: ராஜமௌலி கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. இந்த சூழலில் அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் சூழலில் தற்போது அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Here is the New Details about SS Rajamouli And Mahesh Babu Film

பாகுபலி: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன்போது பேசியிருந்த மணிரத்னம் பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வசூலை அள்ளிய பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் படங்கள் பாலிவுட்டிலும் வசூலை அள்ளலாம் என நிரூபித்த படமும் பாகுபலிதான்.

ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார்.

மகேஷ்பாபுவுடன்: ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படமும் அவரது ஸ்டைலில் படு பிரமாண்டமாக தயாராக இருக்கிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இப்போது ராஜமௌலி இருக்கிறார். இந்த படம் அட்வென்ச்சர் ஜானரில் உருவாகும் என்றும் அநேகமாக ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

யார் ஹீரோயின்?: அதேபோல் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. இந்நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தோனேசியாவை சேர்ந்த செல்ஸி இஸ்லான் நடிக்கவிருப்பதாகவும் அவரை வைத்து ராஜமௌலி ஃபோட்டோஷூட் நடத்தி முடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இதில் அவர் ஹீரோயினாக நடிக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X