Rajamouli - அனுமனாக மாறுகிறாரா மகேஷ் பாபு?.. ராஜமௌலி என்ன செய்ய காத்திருக்கிறாரோ?
சென்னை: Rajamouli (ராஜமௌலி) மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்கப்போகும் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன்போது பேசியிருந்த மணிரத்னம் பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூலை அள்ளிய பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்ரி தென்னிந்தியாவின் படங்கள் பாலிவுட்டிலும் வசூலை அள்ளலாம் என நிரூபித்த படமும் பாகுபலிதான்.
ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார்.
மகேஷ்பாபுவுடன்: ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படமும் அவரது ஸ்டைலில் படு பிரமாண்டமாக தயாராக இருக்கிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இப்போது ராஜமௌலி இருக்கிறார். படமானது ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் அட்வென்ச்சரை மையமாக வைத்து உருவாகவிருப்பது ஏற்கனவே பலரும் அறிந்ததுதான். இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

தீபிகா படுகோனே: அதன்படி இந்தப் படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.அ தேபொல் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மையமாக வைத்துதான் படம் உருவாகும் என்றும் இதில் மகேஷ்பாபுவின் கேரக்டர் அனுமனை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ராமாயணத்தை தழுவி உருவான ஆதிபுருஷ் ஆடி வாங்கியிருக்கும் சூழலில் இது தப்பிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்ர்க்க வேண்டும்.
அதேசமயம் இதில் பணியாற்றுவதற்காக இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட்டிலிருந்து சிறந்த கலைஞர்களை பணியாற்ற வைக்க ராஜமௌலி திட்டமிட்டிருக்கிறார். எனவே நிச்சயம் படம் பந்தயம் அடிக்கும் என்கின்றனர் ராஜமௌலி ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











