Thalaivar 171 - தலைவர் 171.. லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்கே இவ்வளவு வசதியா?.. யப்பா தலையே சுத்துதே

சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) ரஜினிகாந்த் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்துகொடுத்திருப்பதாக தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Here is the New details about Thalaivar 171 Movie

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்கு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.

ஷூட்டிங்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருக்கிறார். சமீபத்தில்தான் ஷூட்டிங்கிலும் அவர் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தலைவர் 171: தலைவர் 170ஐ முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை லோகேஷ் கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் மெகா ப்ளாக் பஸ்டரை கொடுப்பார் என்று ரஜினியின் ரசிகர்கள் ஆவலில் இருக்கின்றனர்.

ரூம் வாடகை: இந்நிலையில் தலைவர் 171 படத்துக்காக லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் ஒரு வசதி செய்துகொடுத்திருப்பதாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்துக்கு கதை எழுதுவதற்காக பெசண்ட் நகர் பீச்சில் ரூம் ஒன்றை போட்டுக்கொடுத்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். அந்த ரூமின் வாடகை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் என்று திரைத்துறையில் பேசப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X