Thalapathy 68 - தளபதி 68 அப்டேட்.. விஜய்க்கு தங்கையாக நடிக்கவிருக்கும் நடிகை யார் தெரியுமா..?
சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68ல் பிரபலமான நடிகை விஜய்க்கு தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வந்து விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பொதுவான ரசிகர்களோ படம் தங்களை கவரவில்லை ஏகப்பட்ட தவறுகள் படத்தில் இருக்கின்றன என கூறுகின்றனர்.
வசூலில் மாஸ்: படம் வெளியாகி முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. அதனையடுத்து முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஜெயிலர் படத்தின் முதல் வார வசூலைவிட அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்
தளபதி 68: லியோ ரிலீஸுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படம் தொடர்பான பணிகள் மும்முரமடைந்துள்ளன. படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
நட்சத்திர பட்டாளம்: தளபதி 68ல் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி 68 பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். பல வருடங்கள் கழித்து பிரசாந்த் தமிழில் ரீ எண்ட்ரி ஆவதாலும்; பெரும் நட்சத்திர பட்டாளம் களமிறங்கியிருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
விஜய்க்கு தங்கை: இந்நிலையில் விஜய்க்கு தங்கையாக பிரபலமான நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது லவ் டுடே படத்தின் மூலம் சென்சேஷன் ஆன நடிகை இவானாதான் விஜய்க்கு தங்கையாக நடிக்கிறார் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் இவானாவின் கதாபாத்திரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அந்த கதையா?: இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும்; தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் எமோஷனல்தான் கதை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் என கூறப்படுவதால் என்ன கொஞ்சம் லியோ வாடையும், சமுத்திரம் வாடையும் அடிக்குது என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











