Thalapathy 68 - தளபதி 68 அப்டேட் இதோ.. பூஜை எப்போது தெரியுமா?.. முழு தகவல் உள்ளே
சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 68 படத்தின் பூஜை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அனுராக் காஷ்யாப், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.கோலிவுட்டில் இருக்கும் மோஸ்ட் வாண்டட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

அப்டேட்: லியோ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே ட்ரெய்லரும் ரிலீஸாகலாம். படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக வெங்கட் பிரபுவும் விஜய்யும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார்.
யார் யார் படத்தில்: இதில் விஜய்க்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இவர்களில் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி என்றும்; இள வயது விஜய்க்கு ப்ரியங்கா மோகன் ஜோடி என்றும் தகவல்கள் கசிகின்றன.மேலும் இது எந்த மாதிரியான ஜானரில் வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. முதலில் அரசியல் ஜானர் என்று தகவல் வெளியான சூழலில் அதனை வெங்கட் பிரபு தீவிரமாக மறுத்தார்.
டைம் ட்ராவலா?: சமீபத்தில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்பட்டது. அதனை பகிர்ந்த வெங்கட் பிரபு எதிர்காலத்துக்கு வருக என்று கூறியிருந்தார். எனவே ஒருவேளை இது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகுமோ என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் பூஜை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
எப்போது பூஜை: இப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதமே நடந்திருக்க வேண்டியது. ஆனால் லியோ ரிலீஸுக்காக அது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் லியோ படத்தின் பூஜை அக்டோபர் மாதம் முதல் வாரம் போடப்பட்டு கையோடு ஷூட்டிங் கிளம்பும் திட்டத்தில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











