Thalapathy 68 - தளபதி 68.. விஜய்யை எதிர்க்கப்போகும் வில்லன் தனி ஒருவனா?.. மாஸா இருக்குமே..

சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Here is the New Details about Thalapathy 68 Update

அக்டோபர் ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என கூறப்படுகிறது. படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

தளபதி 68: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதன்படி படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இந்தப் படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

டபுள் ஆக்‌ஷன் விஜய்: இந்தச் சூழலில் படத்துக்கான பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி அமெரிக்காவுக்கு விஜய்யும், வெங்கட் பிரபுவும் சென்றனர். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடம்பையும் ஸ்கேன் செய்யும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி; இள வயது விஜய்க்கு ப்ரியங்கா மோகன் ஜோடி என்றும் கூறப்படுகிறது.

வில்லன் யார்?: இந்நிலையில் தளபதி 68ல் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கலாம் என கூறப்படுகிறது. தனி ஒருவன் படத்தில் ஏற்கனவே அரவிந்த் சாமி வில்லனாக கலக்கியிருந்தார். எனவே விஜய்க்கு வில்லானாக நடித்தால் இன்னும் மாஸ்டாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே இந்தப் படத்தில் ஜெய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரும் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X