Vijay - ஃபுல் பார்மில் விஜய்.. புயல் வேகத்தில் போறாரே.. தளபதி 69 இயக்குநர் இவரா?.. இந்த முறை க்ளிக் ஆகிடுமாம்

சென்னை: Vijay (விஜய்) விஜய்யின் 69ஆவது படத்தின் இயக்குநர் குறித்த புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 Here is the New Details about Vijay 69th Movie Director

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வந்து விஜய் ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பொதுவான ரசிகர்களோ படம் தங்களை கவரவில்லை ஏகப்பட்ட தவறுகள் படத்தில் இருக்கின்றன என கூறுகின்றனர்.

டல் அடித்த வசூல்?: படம் வெளியாகி முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. ஆனால் அதற்கு பிறகு படத்தின் வசூல் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. படத்தின் வசூல் ரொம்பவே டல் அடித்துவிட்டது அதனால்தான் படக்குழு தயாரிப்பில் எந்த அறிவிப்பும் முதல் நாளுக்குப் பிறகு வெளியாகவில்லை என்ற ஒரு கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

தளபதி 68: லியோ ரிலீஸுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படம் தொடர்பான பணிகள் மும்முரமடைந்துள்ளன. படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

படத்தில் யார் யார்?: தளபதி 68ல் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி 68 பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். பல வருடங்கள் கழித்து பிரசாந்த் தமிழில் ரீ எண்ட்ரி ஆவதாலும்; பெரும் நட்சத்திர பட்டாளம் களமிறங்கியிருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

 Here is the New Details about Vijay 69th Movie Director

தளபதி 69: இந்நிலையில் தளபதி 68 ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும் சூழலில் தளபதி 69 படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யிடம் அவர் இரண்டு முறை கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த இரண்டு கதைகளும் விஜய்யை கவரவில்லை.

தற்போது தீபாவளியை முடித்துவிட்டு விஜய்யிடம் கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லவிருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இப்போது எழுதியிருக்கும் கதை கண்டிப்பாக விஜய்யை கவர்ந்துவிடும் என்றும் திரைத்துறையிலிருந்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X