Vikram - இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள துருவ நட்சத்திரத்துக்கு விக்ரம் கொடுத்த ஐடியா?.. நல்ல கூத்தா இருக்கே
சென்னை: Dhuruva Natchathiram (துருவ நட்சத்திரம்) துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த விக்ரம் இயக்குநர் கௌதம் மேனனுக்கு ஒரு ஐடியா கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

நடிப்பில் கவனம்: இவர் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கௌதம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் ருத்ரதாண்டவம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பத்து தல, கருமேகங்கள் கலைகின்றன உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் லியோ படத்திலும் நடித்திருக்கிறார்.
துருவ நட்சத்திரம்: இதற்கிடையே சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் கௌதம் வாசுதேவ். இதில் விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
எதிர்பார்ப்பில் துருவ நட்சத்திரம்: இந்தப் படமானது கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரத்தின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. இருப்பினும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் விக்ரமும், கௌதமும் சந்தித்து துருவ நட்சத்திரத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

துருவ நட்சத்திரம் ரிலீஸ்: இந்தச் சூழலில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. மேலும் படத்திலிருந்து ஒரு சிங்கிளும் ரிலீஸானது. ஆனால் அது போதிய வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் படம் எப்படியும் ஸ்டைலிஷாக இருக்கும் என கௌதம் மேனனின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். படம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் கொடுத்த ஐடியா?: இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்துக்கு டப்பிங் கொடுத்த விக்ரம் கௌதம் மேனனுக்கு ஒரு ஐடியா கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டப்பிங்கின்போது படத்தை பார்த்த விக்ரமுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம். அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றாலும் இப்போது பார்த்தாலும் ஸ்டைலிஷாக இருக்கிறது என்று கூறிய விக்ரம் இந்தப் படம் நன்றாக ஓடும். அப்படி ஓடினால் இரண்டாவது பாகமும் எடுங்கள் என்று ஐடியா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











