Leo - லியோவிலிருந்து அடுத்த க்ளிம்ப்ஸ் என்ன தெரியுமா?.. தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

சென்னை: Leo (லியோ) லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பாளர் லலித் கூறியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை,திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மாஸ்டரில் ஏற்கனவே விஜய்யும், லோகேஷும் இணைந்து மாஸ் காட்டியிருந்ததால் லியோவிலும் அவ்வாறே நடக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் இருக்கின்றனர்.

Here is the New Information about Leo Movie Next Glimpse

அப்டேட்டுகள்: லியோ படத்திலிருந்து சிறு விஷயம்கூட லீக் ஆகாமல் பார்த்துக்கொண்டனர் படக்குழுவினர். இந்தச் சூழலில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடிதான் என்று விஜய் பாடிய பாடலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகினர். பாடல் பெரும் வரவேற்பை பெற்று இளைஞர்களிடையே ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதேசமயம் பாடலின் வரிகள் விமர்சனத்தை சந்தித்திருக்கின்றன. எனவே பாடல் படத்தில் வரும்போது ஏதேனும் மாற்றத்துடன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்: அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது. விஜய்யின் கையில் பெரிய சுத்தியலுடன் பற்கள் பறக்க ரத்தம் தெறிக்க தெறிக்க அந்த போஸ்டர் இருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் தங்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது என கூறிவந்தனர். படத்தின் கதையும் கேங்ஸ்டர்களை மையப்படுத்தியதுதான் என்று ஷூட்டிங் ஆரம்பித்தபோதே தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும் லோகேஷ் தனது கதையிலும் திரைக்கதையிலும் சர்ப்ரைஸ் வைக்கக்கூடியவர் என்பதால் படம் பார்க்கும்வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது.

Here is the New Information about Leo Movie Next Glimpse

சஞ்சய் தத்: படத்தில் ஏகப்பட்ட பேர் நடித்திருக்கின்றனர். மெயின் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்திருக்கிறார். அவரது பிறந்தநாளையொட்டி நேற்று அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார். பெரிய கழுகுக்கு கீழ் அவர் இருக்கும்படியும் வாயில் சிகரெட்டை புகைத்தபடியும் மாஸாக இருந்தார். அதனை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அந்த க்ளிம்ப்ஸ் ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது.

அடுத்த க்ளிம்ப்ஸ்: இந்நிலையில் லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை தயாரிப்பாளர் லலித் தெரிவித்திருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், "லியோவின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும்" என்றார். ஆகஸ்ட் 15ஆம் தேதி அர்ஜுனின் பிறந்தநாள் ஆகும். அவரும் லியோவில் நடித்திருக்கிறார். எனவே சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று எப்படி அவரது க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியானதோ அதேபோல் ஆகஸ்ட் 15ல் அர்ஜுன் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே லியோ ஷூட்டிங்கை முடித்த விஜய் வெளிநாட்டுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்றிருக்கிறார். விரைவில் சென்னை திரும்பும் அவர் வந்த உடனேயே தனது டப்பிங் பணிகளை தொடங்கவிருக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X