Rajini 170 - ஜெயிலர் சென்ட்டிமெண்ட் ரஜினி 170லும் இருக்கிறதா?.. இதோ லேட்டஸ்ட் தகவல்..

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே செண்ட்டிமெண்ட் ரஜினி 170லும் கடைபிடிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அண்ணாத்த, தர்பார் படத்தின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். கடந்த 10ஆம் தேதி படம் வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக வெற்றிக்கு தவித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது.

Here Is The New Information About Rajini 170th Movie

லால் சலாம்: ஜெயிலர் படம் நடந்துகொண்டிருந்தபோதே தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். அதில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோல் செய்கிறார். இதில் விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் மொத்தம் 50 நிமிடங்கள் வரை படத்தில் வருவார் என கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஜெய்பீம்: இதற்கிடையே ரஜினியின் 170ஆவது படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அந்தப் படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.ஜெய் பீம் படத்தை இயக்கி இருளர் இன மக்களின் வாழ்வியலையும், வலியையும் பேசி மிகச்சிறந்த இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் அவர் இப்போது ரஜினியுடன் இணைந்திருப்பதால் நிச்சயம் இது அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தை லைகா தயாரிக்கிறது.

போலி என்கவுன்ட்டர்: படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அதன்படி ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் உண்மையில் நடந்த போலி என்கவுன்ட்டரை வைத்து இந்தப் படம் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படமும் ஜெய் பீம் போலவே நிச்சயம் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Here Is The New Information About Rajini 170th Movie

படத்தின் பூஜை: படத்தின் பூஜையானது கடந்த சனிக்கிழமை சென்னையில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்து முடிந்தது. மேலும் ரஜினிக்கான லுக் டெஸ்ட்டும் சமீபத்தில் முடிந்தது. படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஜெயிலர் செண்ட்டிமெண்ட்: இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோரும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிற மொழிகளிலிருந்து வேறு சில நடிகர்களை களம் இறக்க படக்குழு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எனவே அந்த செண்ட்டிமெண்ட்டை ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திலும் ஃபாலோ செய்ய முடிவு செய்துவிட்டாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X