GOAT சீக்ரெட்.. போஸ்டரில் இடம்பெற்ற ஹெலிகாப்டருக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கா?

சென்னை: லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் படம் நடிக்க கமிட்டானார் விஜய். அவரது 68ஆவது படத்தை அட்லீ இயக்குவார் என்று தகவல்கள் பரவிய சூழலில் ஸ்வீட் சர்ப்ரைஸாக வெங்கட் பிரபு இயக்குவார் என்று வெளியான அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்திருந்திக்கிறார் அவர். எனவே லியோ படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையவிருக்கிறார்கள் என அட்டகாசமான அறிவிப்பு வெளியானது. அஜித்துக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை வெங்கட் கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் தரமான சம்பவத்தை செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

Here is the New Secret About GOAT Dilip Subbarayan Reveals

GOAT: இந்தப் படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அதிகம் புழக்கத்தில் இருக்கும் GOAT வார்த்தையை படத்தின் பெயராக வைத்தது ரொம்பவே புதுமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையுடன் ஷூட்டிங் தொடங்கி முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

இலங்கையில் ஷூட்டிங்: படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் இலங்கையில் நடக்கவிருப்பதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையில் ஷூட்டிங் நடத்துவது அவ்வளவு நல்லதல்ல என்பது உலக தமிழர்களின் விருப்பமாக இருப்பதாக சில பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அங்கு ஷூட்டிங் நடத்துவதில் வெங்கட் பிரபு உறுதியாக இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

போஸ்டர்கள்: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு GOAT படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டர்களில் விஜய் படு யங்காக இருந்தார். மேலும் இதில் விஜய் டபுள் ஆக்‌ஷன் என்றும் அப்பா கேரக்டர் மற்றும் மகன் கேரக்டரை செய்கிறார் என்றும் தெரிகிறது. அப்பா விஜய்க்கு நடக்கும் துரோகத்தை டைம் ட்ராவலில் சென்று முறியடிப்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அப்பா விஜய் கமாண்டோ ரோல் செய்திருக்கலாம் என்று போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.

போஸ்டரில் இருக்கும் ஹெலிகாப்டர்: சமீபத்தில் வெளியான போஸ்டர்களில் ஒரு போஸ்டரில் ஹெலிகாப்டர் ஒன்று இருந்தது. தற்போது அந்த ஹெலிகாப்டரின் பின்னணியில் இருக்கும் சீக்ரெட் குறித்து படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "GOAT திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

சீக்ரெட் இருக்கு: இதுவரைக்கும் 5 முதல் 6 ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டிருக்கின்றன. பொங்கல் பண்டிகை அன்று வெளியான போஸ்டரின் பின்னணியில் இருக்கும் ஹெலிகாப்டர் மற்றும் வெடிகுண்டு வெடிப்பது போன்று இருப்பது போஸ்டருக்காக உருவாக்கப்பட்டது இல்லை. அந்தக் காட்சியில் ஒரு பின்னணி இருக்கிறது"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X