Thalapathy 68 Update - தளபதி 68 அப்டேட்... பாடல் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்தது என்ன தெரியுமா?
சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடங்கிவிட்டது. அதனையடுத்து ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் புக் செய்துவருகின்றனர். இதற்கிடையே லியோவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய்.

தளபதி 68: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இயக்குகிறார். வெங்கட் பிரபுவின் படங்கள் கமர்ஷியல் பாதையில் இருந்தாலும் ஏதேனும் ஒரு விஷயம் புதிதாக இருக்கும் என்பதாலும்; திரைக்கதையிலும் வித்தியாசம் இருக்கும் என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகம் வைத்திருக்கின்றனர்.
பூஜை: விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்று அங்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய்க்கு ஸ்கேனிங் செய்யப்பட்டது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை போடப்பட்டது. அதில் படக்குழுவினர் தவிர்த்து வேறு யாருமே வரவில்லை. சொல்லப்போனால் எப்போது வெங்கட் பிரபுவுடனேயே சுற்றிக்கொண்டிருக்கும் வைபவ், ஜெய்,மிர்ச்சி சிவா உள்ளிட்டோரும் கூட வரவில்லை.
ஷூட்டிங்: பூஜையை முடித்த கையோடு ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. அதன்படி முதலில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் அதற்கு ராஜுசுந்தரம் கோரியோ கிராஃபி செய்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நட்பை அடிப்படையாக வைத்துதான் அந்தப் பாடல் உருவாகியிருக்கிறது இதில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகிய மூன்று பேரும் ஆடியதாகவும் ஒரு தகவல் உண்டு.
அடுத்த ஷெட்யூல்: பாடல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழு வெளிநாட்டில் அடுத்த ஷெட்யூலை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி இப்போது படக்குழு தென் ஆப்பிரிக்கா சென்றிருக்கிறதாம். அங்கு சில காட்சிகளும், சண்டை காட்சிகளும் எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் ஒன்று ஓட ஆரம்பித்திருக்கிறது.
படத்தில் யார் யார்?: இதற்கிடையே இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்ச் சௌதரி, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 80ஸ் ஃபேவரைட்டான மைக் மோகன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











